ஆண்டர்சு இலெக்செல்
ஆண்டர்சு யோகான் இலெக்செல் (Anders Johan Lexell) (24 திசம்பர் 1740 - 11திசம்பர் [யூ.நா. 30நவம்பர்] 1784) ஒரு பின்னிய-சுவீடிய வானியலாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் தம் வாழ்நாள் முழுவதையும் உருசியப் பேரரசில் கழித்தார்.இவர் உருசியாவில் ஆந்திரேய் இவனோவிச் இலெக்செல் ( Andrei Ivanovich Leksel) (Андрей Иванович Лексель) என அழைக்கப்பட்டார்.
ஆண்டர்சு இலெக்செல் Anders Lexell | |
---|---|
![]() எஃப். ஆந்திங் செய்த படிமம், (1784) | |
பிறப்பு | திசம்பர் 24, 1740 அபோ, சுவீடன் (இன்றைய பின்லாந்து) |
இறப்பு | 11 திசம்பர் 1784 43) [OS: 30 November 1784] புனித பீட்டர்சுபர்கு, உருசியப் பேரரசு | (அகவை
வாழிடம் | சுவீடன் (பின்லாந்து), உருசியா |
தேசியம் | சுவீடியர், பின்னர் உருசியர் |
துறை | கணிதவியல் இயற்பியல் வானியல் |
பணியிடங்கள் | உப்சாலா நாவாயியல் பள்ளி பேரரசு கால உருசிய அறிவியல் கல்விக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | துர்க்கு அரசு கல்விக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | யாகோப் கடோலின் |
Other academic advisors | எம். ஜே. வல்லேனியசு |
முனைவர் பட்ட மாணவர்கள் | <!—மார்ட்டின் பிளாட்சுமன் --> |
அறியப்படுவது | இலெக்செல் வால்வெள்ளியின் வட்டணையைக் கணித்தார் உரேனசுவின் (வருணனின்) வட்டணையைக் கணித்தார் |
தாக்கம் செலுத்தியோர் | இலியோனார்டு யூலர் |
இவர் வான்கோள இயக்கவியலிலும் பலகோணவியலிலும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்; முன்னதற்காக இலெக்செல் வால்வெள்ளி இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. La Grande Encyclopédie எனும் பெருங்களஞ்சியம் இவர் தன் காலத்தில் கோளகோணவியல் கணிதப் புலத்தில் ஆர்வமூட்டும் புதிய தீர்வுகளை உருவாக்கியதாகவும் அவற்றை அவர் தனது வால்வெள்ளி, கோளியக்க ஆய்வில் பயன்படுத்தியதாகவும் கூறுகிறது. கோளகோணத்தின் முக்கோண தேற்றத்துக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது.
இவர் அவரது கால உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் தலைசிறந்த உறுப்பினர்களில் ஒருவராகத் திகழ்ந்துள்ளார். தன் 16 ஆண்டுகாலப் பணியில் 66 ஆய்வுரைகளை வழங்கியுள்ளார். இலியோனார்டு இவரைப் பற்ரி பின்வருமாறு கூறுகிறார்: "இலெக்செலை விட்டால் இத்தகைய ஆஉவுரைகலை நானோ தெ அலம்பெர்ட்டோ தான் இயற்றமுடியும்".[1] யோகான் யுலருக்கு எழுதிய மடலில் டேனியல் பெர்னவிலி இவரது பணியைப் பின்வருமாறு புகழ்ந்துரைக்கிறார் "இலெக்செல் பனிகளைப் பெரிது நயக்கிறேன். அவை ஆழமானவையுமார்வமூட்டுபவையும் ஆகும்.அவரது அடக்கம் அவரது பணிகளுக்கு மேலும் தகைமை சேர்க்கிறது. இது செம்மைசான்ற பெருமக்களுக்கே உரியதாகும்".[2]
இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. ஆனால், இலியோனார்டு யூலருக்கும் அவரது குடும்பத்துக்கும் நெருங்கிய நட்போடு விளங்கினார். இவர் யூலரின் இறப்பைக் அவரது வீட்டில் சென்று கண்ணுற்றார். யூலருக்குப் பின்னர் இவர் உருசிய அறிவியல் கழகத்தின் கணிதக் கல்வியியல் கட்டிலில் தொடர்ந்து பணியாற்றினார். ஆனால், அடுத்த ஆண்டே இவரை இறப்பு தழுவிற்று. குறுங்கோள் 2004 இலெக்செல், நிலாவின் இலெக்செல் குழிப்பள்ளம் ஆகியவை இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
- "Precis de la vie de M. Lexell". Nova Acta Academia Scientarum Imperialis Petropolitanae 2: 16–18. 1784.
- "none". Uchenaya Korrespondentsiya 62 (48). 1776-02-24.