ஆகுஸ்டஸ் மலை

ஆகுஸ்டஸ் மலை தேசிய பூங்கா (Mount Augustus National Park) மேற்கு ஆஸ்திரேலியா தலைநகர் பேர்த் நகரில் இருந்து 852 கிமீ வடக்கே அமைந்துள்ளது. இப்பூங்காவில் அமைந்துள்ள ஆகுஸ்டஸ் மலை உள்ளூர் பழங்குடி மக்களான வஜாரிகளினால் பரிங்குரா என அழைக்கப்படுகிறது[1].

ஆகுஸ்டஸ் மலை

ஆகுஸ்டஸ் மலை

ஆகுஸ்டஸ் மலை கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்திலும், அல்லது அதனைச் சூழவுள்ள தரைப்பகுதியில் இருந்து 860 மீ உயரத்திலும் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 47.95 கிமீ². இம்மலை உலகின் மிகப்பெரிய ஒரே பாறையினாலான கற்பாறை எனக் கருதப்படுகிறது[2]. ஆனாலும், ஆஸ்திரேலியாவின் உலூரு என்ற மலையும் இதற்கென உரிமை கோரி வருகிறது.

ஐரோப்பிய வரலாறு

1858 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாள் இதன் உச்சியை பிரான்சிஸ் தொமஸ் கிரெகரி என்பவர் அடைந்தார். இவரே இம்மலையில் ஏறிய முதலாவது ஐரோப்பியர் ஆவார். இவரது சகோதரர் சேர் ஆகுஸ்டஸ் சார்ல்ஸ் கிரெகரி (1819-1905) என்பவரின் நினைவாக இம்மலைக்கு ஆகுஸ்டஸ் மலை என இவர் பெயரிட்டார்.

மேற்கோள்கள்

  1. Naturebase
  2. "Mount Augustus - The largest monolith in the world"

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.