அழிசி
காவிரிக்கரையில் உள்ள ஆர்க்காடு நாட்டை ஆண்ட அரசன் அழிசி. அவன் மகன் சேந்தன். இருவரும் அரசர்கள்.[1] இவன் சோழரோடு அனுக்கத்தொடர்பு உடையவன்.[2] இவனை இளையப் பெருமகன் என பரணர் குறிப்பதன் மூலம் வாளேந்திய வீரர் படைக்கு இவன் தலைவன் என அறியலாம்.[3]
ஒப்பு நோக்குக
- ஆதன் அழிசி - ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி என்ற ஒருவன் இருந்தான்.[4] இளையர் குடி அழிசி காவிரி ஆற்றின் மருதமரக் கரையில் கட்டி வைக்கப்பட்டான் என்ற செய்தியும் உள்ளது.[5] இந்த இரணடையும் இணைத்துக் காட்டி இருவரும் ஒருவரே என்றும் அழிசி சோழரோடு பகைமை கொண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இருந்ததால் அதை எதிர்க்கவே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மீது எதிரிகள் படை எடுத்தனர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார்.[6] அதனாலேயே சோழ நாட்டு கரையில் அழிசியும் கட்டி வைக்கப்பட்டான் என்றும் கூறுவர்.
மூலம்
சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். 2007. பக். 135-138.
மேற்கோள்களும் குறிப்புகளும்
- நற்றிணை 190
- நற்றிணை 87
- குறுந்தொகை 258
- புறம் 71:4-19
- குறுந்தொகை - 258:6
- #மூலம்
மேற்கோள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.