அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்

வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம் யாழ்ப்பணத்தின் வடக்கே அளவெட்டி என்ற ஊரின் தெற்கே வயற்கரை ஓரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆகும்.

அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்

இக்கோவில் 250 ஆண்டுகள் பழமையானது என்பர். 1984 ஆகத்து 31 இல் இக்கோவில் புதிதாய்க் கட்டப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. அப்போது பிள்ளையார், முருகன், வைரவர் ஆகியோருக்கும் சுற்றத்துக் கோயில்கள் அமைக்கப்பட்டன. பின்னர் 2001 மே 4 யிலும் குடமுழுக்கு நடைபெற்றது.

சுற்றத்து தெய்வங்கள்

கோவிலைச்சுற்றிலும் பல சுற்றத்து தெய்வங்கள் காணப்படுகின்றன. முருகன், பிள்ளையார், சண்டேசுவரர் போன்ற தெய்வங்களும் தேர் உள்ள இடத்திற்கு அருகில் பைரவரும் காணப்படுகின்றார்.

கோவில் மரம்

இக்கோவிலின் கோவில் மரம் (தல விருட்சம்) வேப்பமரமாகும். கோவிலுக்கு முன் இரு கோவில் மரங்கள் காணப்படுகின்றன.

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.