அல்கோடோனைட்டு
அல்கோடோனைட்டு (Algodonite) என்பது Cu6As என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தாமிர ஆர்சனைடு கனிமம் ஆகும். சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் காணப்படும் இக்கனிமம் அறுகோணப் படிகங்களாக படிகமாகிறது. மோவின் அளவு கோலில் அல்கோடோனைட்டின் கடினத்தன்மை மதிப்பு 4 எனவும் நீர் ஒப்படர்த்தி அளவு 8.38 - 8.72. ஆகவும் உள்ளது.
அல்கோடோனைட்டு Algodonite | |
---|---|
![]() அல்கோடோனைட்டு - அவூட்டன் மாவட்டம், மிச்சிகன், அமெரிக்கா | |
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu6As |
இனங்காணல் | |
மோலார் நிறை | 456.2 g |
நிறம் | சாம்பல் நிறம், வெண் வெள்ளி, சாம்பல் வெள்ளி, வெண்கலநிறமாக மங்குகிறது |
படிக இயல்பு | பேரளவில் மணிமணியாக பொதுவாகக் கருங்கல் மற்றும் தீப்பாறையாகக் காணப்படுகிறது. |
முறிவு | சார்-சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 4 |
மிளிர்வு | உலோகம் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுக விடாது |
ஒப்படர்த்தி | 8.38 (அளவீடு), 8.72 (கணக்கீடு) |
பிற சிறப்பியல்புகள் | காந்தத் தன்மையற்றது, ஒளிரும் தன்மையற்றது |
மேற்கோள்கள் | [1][2][3] |

உடோமிகைட் மற்றும் அல்கோடோனைட்டு சேர்ந்த கலவையான மோகாவ்கைட் நக்கெட் மற்றும் செப்பு
சிலி நாட்டில் உள்ள கோகியூம்போ நகரிலுள்ள அல்கோடோன்சு வெள்ளி சுரங்கத்தில் 1857 ஆம் ஆண்டில் இது முதன் முதலாக கண்டறியப்பட்டது.
மேற்கோள்கள்
- Algodonite. Webmineral
- Algodonite. Mindat.org
- Williams, Sidney A. (1963). "Crystals of rammelsbergite and algodonite". American Mineralogist 48: 421–422. http://www.minsocam.org/MSA/collectors_corner/arc/rammelsbergite.htm.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.