அலோர் காஜா தமிழ்ப்பள்ளி

அலோர் காஜா தமிழ்ப்பள்ளி மலேசியா, மலாக்கா மாநிலத்தில் அலோர் காஜா நகரில் அமைந்துள்ளது. மலேசியத் தமிழறிஞர் மா.கு.மாணிக்கம் கால் பதித்த தமிழ்ப்பள்ளி எனும் பெருமை இப்பள்ளிக்கு உண்டு.

அலோர் காஜா தமிழ்ப்பள்ளி
SJK(T) Alor Gajah
அமைவிடம்
 மலேசியா
அலோர் காஜா, மலாக்கா
அமைவிடம்2 23N 102 13E
தகவல்
வகைஆண்/பெண்
இரு பாலர் பள்ளி
தொடக்கம்4. மே 1950
நிறுவனர்W.R. மில்லர்
பள்ளி மாவட்டம்அலோர் காஜா
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம்MBD0061
தலைமை ஆசிரியர்திருமதி.இரா.புஷ்பராணி

தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள்439
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

இப்பள்ளி மலாக்கா மாநிலத்தில் அதிக செலவில் கட்டப் பட்ட தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளி 2010 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 55.2 விழுக்காடு தேர்ச்சி பெற்றது.

வரலாறு

1949 ஆம் ஆண்டு அலோர் காஜாவில் தமிழ்ப்பள்ளி ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தொடங்கப் பட்டது. கிளாமாக் தோட்ட நிர்வாகி W.R. மில்லர் என்பவரின் தலைமையில் வி.எஸ்.ராமன், சி.எம்.சேத், எஸ்.சண்முகம், பி.கே.முனியாண்டி, எஸ்.சிதம்பரம், என்.எஸ்.தாவுது, ராஜு ஆகியோர் கொண்ட குழு ஒன்று இந்த நோக்கத்திற்காக அமைக்கப் பட்டது.

மாவட்டத்தில் உள்ள தோட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரின் நிதியுதவியுடன் அரசாங்கம் 30 ஆண்டு காலத் தவணையில் இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கியது. கட்டட வேலைகள் 6.8.1949-இல் தொடங்கின.

மலாக்கா மாநிலத் தொழிலாளர் துணை ஆணையர் தி கிப்சன் என்பவர் அடிக்கல் நாட்டினார். 1950-இல் நான்கு வகுப்பறைகளும் ஓர் அலுவலகமும் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப் பட்டது.

மா.கு.மாணிக்கம்

1950 மே மாதம் 4 ஆம் தேதி 90 மாணவர்களுடன் அலோர் காஜா தமிழ்ப் பள்ளி செயல்படத் தொடங்கியது. மா.கு.மாணிக்கம், வி.ஏ.தண்டாயுதபாணி ஆகியோர் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. 1959-இல் மேலும் இரண்டு வகுப்பறைகளை மாநிலக் கல்வி இலாகா அமைத்துத் தந்தது.

மாணவர் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது. வகுப்பறை பற்றாக்குறையால் மாலை நேர வகுப்புகள் நடத்தப் பட்டன. பின்னர் 1969-இல் கல்வி இலாகா மேலும் இரண்டு வகுப்பறைகள், ஓர் ஆசிரியர் அறை, ஓர் அலுவலகம், சிற்றுண்டிச்சாலை மற்றும் கழிவறை ஆகியவற்றை அமைத்துத் தந்தது.

தலைமையாசிரியர்கள்

  • திரு. மா.கு.மாணிக்கம் (1950–1969)
  • திரு. எஸ்.ஜி.ஆரோக்கியசாமி (1969–1972)
  • திரு. கே.எஸ்.பாலகிருஷ்ணன் (1973–1979)
  • திரு. எஸ்.சிங்கராஜு (1980–1981)
  • திரு. எம்.சுப்பிரமணியம் (1981–1987)
  • திரு. கே.கண்ணன் (1987–1995)
  • திரு. எம்.சுப்பிரமணியம்
  • திரு. சி.என்.என்.சிவராமன்
  • திருமதி. இரா.புஷ்பராணி (2011)

கே.கண்ணன்

1987-இல் தலைமையாசிரியர் பொறுப்பினை கே.கண்ணன் ஏற்றார். அவரது முயற்சியில் மாணவர் எண்ணிக்கை 1989-இல் 355 ஆகவும் 1993-இல் 455 ஆகவும் உயர்ந்தது.[1]

1980 ஆம் ஆண்டில் 18 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். இந்த எண்ணிக்கை 1993-இல் 22 ஆக உயர்ந்தது. வகுப்பறை பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய 38,000 ரிங்கிட் செலவில் மூன்று வகுப்பறைகளை, கூட்டுப் பணி திட்டத்தின் வழி கட்டி முடித்தார் கே.கண்ணன். 1955-இல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் மேலும் மூன்று வகுப்பறைகளையும் ஒரு கிடங்கினையும் அமைப்பதில் வெற்றி கண்டார்.

டத்தோ என்.அருணாசலம்

இந்த நிலையில் அலோர் காஜா தமிழ்ப் பள்ளி 481 மாணவர்களைக் கொண்டு மலாக்கா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப் பள்ளி என்ற நிலையைப் பெற்றது.

கே.கண்ணன் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் அப்போதைய மாநில ம.இ.கா தலைவரும் பள்ளி நிர்வாகத் தலைவருமாக டத்தோ என்.அருணாசலம் இருந்தார். அவருடைய ஒத்துழைப்புடன் காலாவதியான பள்ளியின் நில உரிமம் புதுப்பிக்கப் பட்டது. அத்துடன் அலோர் காஜா தமிழ்ப் பள்ளி ஒரு புதிய பெரிய பள்ளியாக அமைக்கும் முயற்சிகளும் தொடங்கப் பட்டன.

டத்தோ இராகவன்

இதன் பின் அப்போதைய மாநில ம.இ.கா தலைவரும் பள்ளியின் வாரியத் தலைவருமான டத்தோ ஆர். இராகவன், அலோர் காஜா தமிழ்ப் பள்ளியின் நிலையை ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு, அரசாங்கத்திடம் இருந்து 14 இலட்சம் ரிங்கிட் பெற்றுத் தந்தார். 2010 டிசம்பர் 7 ஆம் தேதி புதிய நான்கு மாடிக்கட்டடம் திறப்பு விழா கண்டது.[2]

2011-இல் இப்பள்ளியில் அரசாங்கப் பாலர் பள்ளி தொடங்கப் பட்டது. அலோர் காஜா தமிழ்ப் பள்ளியில் தற்சமயம் 28 ஆசிரியர்களும் 439 மாணவர்களும் உள்ளனர்.

பள்ளி நிர்வாகம்

  • தலைமையாசிரியர்: திருமதி இரா.புஷ்பராணி
  • துணைத் தலைமையாசிரியர் (கலைத் திட்டம்): திருமதி. க.கோகிலம்
  • துணைத் தலைமையாசிரியர் (மாணவர் நலன்): திருமதி. இரா.சாந்தி
  • துணைத் தலைமையாசிரியர் (புறப்பாடம்): திருமதி. சு.மணிமேகலை
  • பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்: திரு. ஆர்.எஸ்.மணியம்

பொது

மலேசிய நாட்டின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக அலோர் காஜா தமிழ்ப் பள்ளி வெற்றி நடை போட்டு வருகின்றது.
ஆசிரியர்களும் அர்ப்பண உணர்வுடன் உழைத்து வருகின்றனர்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.