அலெக்சிசு சிப்ராசு

அலெக்சிசு சிப்ராசு (Alexis Tsipras, கிரேக்க மொழி: Αλέξης Τσίπρας; பிறப்பு 28 சூலை 1974) is a கிரேக்க அரசியல்வாதியும் சனவரி 26, 2015 முதல் கிரேக்கப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளவரும் ஆவார். தீவிர இடதுசாரிக் கூட்டணியின் (SYRIZA) தலைவராக 2009 முதல் இருந்து வருகின்றார்.[1][2] முதன்முதலாக 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்று கிரேக்க நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்ராசு எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். 2014ஆம் ஆண்டில் நடந்து ஐரோப்பிய ஆணையத்திற்கான தேர்தல்களில் தலைவர் பதவிக்கு ஐரோப்பிய இடதுசாரிகளின் கட்சி சார்பாக போட்டியிட்டார். சனவரி 25, 2015 அன்று சிப்ராசு பொதுத்தேர்தல்களில் சிரிசாவிற்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார்; 36% வாக்குகளும் நாடாளுமன்றத்தின் 300 இடங்களில் 149 இடங்களில் வெற்றியும் கிடைத்தது.

அலெக்சிசு சிப்ராசு
Αλέξης Τσίπρας

நாடாளுமன்ற உறுப்பினர்
கிரேக்கப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 சனவரி 2015
குடியரசுத் தலைவர் கரொலோசு பாபவுலியசு
முன்னவர் அன்டோனிசு சமராசு
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
20 சூன் 2012  26 சனவரி 2015
பிரதமர் அன்டோனிசு சமராசு
முன்னவர் அன்டோனிசு சமராசு
பின்வந்தவர் அன்டோனிசு சமராசு
தீவிர இடதுசாரிக் கூட்டணியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
4 அக்டோபர் 2009
முன்னவர் அலெகோசு அலவனோசு
தனிநபர் தகவல்
பிறப்பு 28 சூலை 1974 (1974-07-28)
ஏதென்ஸ், கிரீசு
அரசியல் கட்சி தீவிர இடதுசாரிக் கூட்டணி
துணைவர் பெரிசுட்டெரா பாட்சியனா
பிள்ளைகள் 2
படித்த கல்வி நிறுவனங்கள் ஏதென்சு தேசிய தொழினுட்ப பல்கலைக்கழகம்

மேற்சான்றுகள்

  1. (in Greek)ANA-MPA. 9 October 2006. http://www.ana-mpa.gr/anaweb/user/showplain?maindoc=8021532&maindocimg=8021551&service=143. பார்த்த நாள்: 9 October 2009.
  2. "Alexis Tsipras to head SYRIZA Parliamentary group". Athina 9.84 Municipal Radio (athina984.gr). 8 October 2009. http://www.athina984.gr/node/69377. பார்த்த நாள்: 9 October 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.