அலெக்சாண்டர் லுகசெங்கோ

அலெக்சாந்தர் கிரிகோரியெவிச் லுக்கசேங்கோ (Alexander Grigoryevich Lukashenko, பெலருசிய மொழி: Аляксандр Рыгоравіч Лукашэнка, உருசியம்: Александр Григорьевич Лукашенко, பிறப்பு: ஆகத்து 30, 1954) பெலருஸ் நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர் (சனாதிபதி) ஆவார். 1994 முதல் தொடர்ந்து இப்பதவியில் இருக்கிறார்.[1] லுக்கசேங்கோ அரசுக்குச் சொந்தமான விவசாயப் பண்ணை ஒன்றில் பணிப்பாளராகவும், சோவியத் எல்லைப் படைப் பிரிவிலும் பணியாற்றிய பின்னர் அரசியலுக்கு வந்தார். இவரே பெலருஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிவதற்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு அரசுப் பிரதிநிதியாவார்.

அலெக்சாந்தர் லுக்கசேங்கோ
Alexander Lukashenko
லுக்கசேங்கோ (2015)
பெலருசின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 சூலை 1994
முன்னவர் மீச்சிசிலாவ் இரீப் பெலருசு சோவியத் தலைவர்
தனிநபர் தகவல்
பிறப்பு அலெக்சாந்தர் கிரிகோரியெவிச் லுக்கசேங்கோ
30 ஆகத்து 1954 (1954-08-30)
கோப்பிசு, சோவியத் ஒன்றியம்
(இன்றைய பெலருஸ்)
அரசியல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கலீனா செல்னெரோவிச் (1975–இன்று)
பிள்ளைகள்
  • விக்தர்
  • திமீத்ரி
  • நிக்கொலாய்
இணையம் president.gov.by/en/
படைத்துறைப் பணி
பற்றிணைவு
கிளை
  • சோவியத் எல்லைப் படைகள்
  • பெலருசிய ஆயுதப்படைகள்
பணி ஆண்டுகள்
  • 1975–1977
  • 1980–1982
தர வரிசை பெலருசின் மார்சல்

வெளி இணைப்புகள்

  1. "Belarus – Government". The World Factbook. Central Intelligence Agency (18 திசம்பர் 2008). மூல முகவரியிலிருந்து 10 திசம்பர் 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 திசம்பர் 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.