அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி
அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி (உருசியம்: Алекса́ндр Моисе́евич Пятиго́рский), உருசிய நாட்டுத் தத்துவவியலாளர், எழுத்தாளர், வரலாற்றாய்வாளர், தென்னாசிய பண்பாட்டு ஆய்வாளர் ஆவார். மொழியியலை நன்கு கற்ற இவர் தமிழ், உருசியம், சமற்கிருதம், பாளி, திபெத்தியம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு கற்றவர். கார்டியன் என்னும் ஆங்கில நாளிதழ் இவரை “உருசிய நாட்டு சிறந்த தத்துவவியலாளர் என்றும் சிறந்த சிந்தனையாளர் என்றும்” போற்றியது.
அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி | |
---|---|
![]() | |
பிறப்பு | 30 சனவரி 1929 |
இறப்பு | 25 அக்டோபர் 2009 (அகவை 80) இலண்டன் |
படித்த இடங்கள் |
|
வேலை வழங்குபவர் |
|
இளமைப் பருவம்
பியாதிகொர்சுகி 1929 ஆம் ஆண்டு, சனவரி 30 ஆம் நாளில் மாஸ்கோவில் பிறந்தார். இவர் தந்தை மொசே விரிவுரையாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர், பின்னர், இரண்டாம் உலக்ப் போரின்போது ஆயுதந் தயாரிக்கும் கிடங்குக்கு தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். அலெக்சாந்தார் அங்கே பணியாற்றினார். கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் தேர்ச்சி பெறாததால் பள்ளியிருந்து இருமுறை வெளியேற்றப்பட்டார். ஆனால், தன் தீவிர முயற்சியால் இலத்தீன் மொழியை கற்றறிந்தார். மொழியியல் படிப்பில் ஆர்வங்காட்டிய இவர், கையில் கிடைக்கும் எந்தச் செய்தியையும் படித்தார்.
கல்வியும் பணியும்
1951 ஆம் ஆண்டில் மாஸ்கோ மாநில பல்கலைக்கழத்தில் தத்துவவியல் கற்ற இவர், ஸ்டாலின்கிராடு நகரில் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளில் வரலாறு பாடம் நடத்தினார். மீண்டும் மாஸ்கோ திரும்பி தெற்காசியவியல் கழகத்தில் (Institute of Oriental Studies) சேர்ந்தார். தமிழ் மொழியையும் இந்துத்துவத்தையும் கற்றார். 1960 ஆம் ஆண்டில் முதல் உருசியத் தமிழ் அகராதியை இவர் உருவாக்கினார். 1964 ஆம் ஆண்டில் மனித உரிமைக்கெதிரான எழுத்தாளர் குழுவில் இணைந்தார். உருசிய அமைப்புக்கெதிரான முறையில் பழங்கால தெற்காசிய தத்துவங்களை ஆய்வு மேற்கொண்டதாக சிலர் கருதினர். இவரும் இவர் மொழியியல் துறை நண்பர்களும் சமற்கிருதம் தொடர்பான வாக்குவாதங்களில் ஈடுபடுவதாக அறியப்பட்ட இவர் 1968 ஆம் ஆண்டில் மாஸ்கோ தெற்காசிய ஆய்வுக்கழகத்திலிருந்து வெளியேறினார். தொடர்ந்து மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றினார். இந்தியவியல் ஆய்வுகளை மேற்கொண்ட இவர், புத்த சமய ஆய்வுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இந்தியவியல் ஆய்வாளர்கள் தவிர்த்த பிறருடன் உளவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். மெரப் மமர்டசுவில்லி என்னும் இவரது நண்பரும் இவருடன் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
இலண்டன் நகருக்குச் சென்ற இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் ஆற்றினார். ஆப்பிரிக்க ஆசியவியல் பண்பாட்டுக் கழகத்தில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். ஐந்து முறை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நான்கு மகவுகள் உள்ளனர்.