அலீ

முகம்மது நபியின் பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான அலீ(ரலி) அவர்கள் நான்காவது கலீபாவாகப் பதவி வகித்தார். அலி(ரலி) ராசிதுன் கலீபாக்களில் நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். உதுமானின் படுகொலைக்குப் பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதைத் தொடர்ந்து பலர் அலீ(ரலி) அவர்களை அடுத்த கலீபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்றுப் பொறுப்பேற்ற அலீ(ரலி) தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியாவின் ஆளுநர் முஆவியா(ரலி) என்பவர், அலீக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிஜிய்யாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.

ʿஅலி இப்னு அபீ தாலிப்
நம்பிக்கையாளர்களின் தளபதி (அமீருல் முஃமினீன்)
கலீபா அலீயின் பேரரசு காலம் 661, இளம் பச்சையில் இருப்பது அலீயின் ஆட்சியின் கீழ் இல்லாதவை.
காலம்656–661[1]
Full nameஅலீ இப்னு அபீ தாலிப்
பட்டங்கள்ஹசனின் தந்தை (அரபி: அபுல் ஹசன்)
புளுதி/மண்ணின் தந்தை (அரபி: அபூ துராப்)
முர்தளா ("One Who Is Chosen and Contented")
இறைவனின் சிங்கம் (Arabic: Asad-ullah)
சிங்கம் (அரபி: Haydar)[1]
முதல் அலீ(ரலி)
பிறப்புஅக்டோபர் 23, 598(598-10-23)

[2],மார்ச்சு 17, 599(599-03-17)

or மார்ச்சு 17, 600(600-03-17)
[1]
பிறந்த இடம்கஃபா, மக்கா[1]
இறப்புசனவரி 28, 661(661-01-28) (அகவை 62)
இறந்த இடம்கூபா[1]
அடக்கத்தலம்இமாம் அலீ பள்ளி, நஜாப், ஈராக்
முன் ஆட்சிசெய்தவர்சியா இமாம்கள் முகம்மது என்றும் /உதுமான் இப்னு அஃப்ஃபான் கலீபா என்று ஏனையோரும்
பின் ஆட்சிசெய்தவர்ஹசன்[3]/முஆவியா I
Wivesபாத்திமா[1]
Fatima bint Hizam al-Qilabiyya ("Ummu l-Banin")
Offspringஹசன்
ஹுசைன்
ஸைனப்
(See:Descendants of Ali ibn Abi Talib )
Fatherஅபூ தாலிப்
Motherபாத்திமா பின்து அஸத்

குறிப்புகள்

  1. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc.. Retrieved 2007-10-12
  2. Khashayar
  3. Madelung 1997, p. 311
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.