அலியா

இசுரேலியர்களுக்கு தங்கள் இறைவன் வாக்களித்தாக நம்பும் இசுரேலிய நிலத்துக்கு யூதர்கள் மீண்டும் வந்து குடியேறல் அலியா(எபிரேயம்: עלייה பலுக்கள்: அலியா பொருள்:ஏற்றம்) எனப்படுகிறது. அலியா சியோனிய கொள்கையின் முக்கிய அம்சமாகும். மாற்றாக யூதர் இசுரவேலின் நிலங்களை விட்டு வெளியேறல் யெரிதா என்றழைக்கப்படுகிறது. இசுரேலிய புனித பூமிக்கு திரும்புவதே பாபிலோனிய நாடு கடத்தலுக்குப் பின் யூதர்களின் பேரவாவாக இருந்தது. 1882-க்குப் பின்னர் பாலஸ்தீனத்திற்கும், பிறகு தற்போதைய இசுரேலுக்கும் மிகுதியான அளவில் யூதர்களின் உள் குடியேற்றம் அமைந்தது.

உசாத்துணை

மேலும் படிக்க

  • Ben-Gurion, David From Class to Nation: Reflections on the Vocation and Mission of the Labor Movement (Hebrew), Am Oved (1976)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.