அறிதிற மொழியியல்

மொழியியலிலும், அறிதிற அறிவியலிலும் (cognitive science), அறிதிற மொழியியல் என்பது, மொழியை, கூர்ப்பியல் முறையில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்திய உடற்கூற்று அடிப்படையில் நோக்குவதுடன், மனித மூளை பற்றிய நடப்பிலுள்ள புரிதல்களுடன் சிறப்பாகப் பொருந்தி வருகின்ற அல்லது மேலும் மேம்படுத்தக்கூடிய விளக்கங்களைக் கண்டறியவும் முயல்கின்றது.

மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்

மொழி உருவாக்கம், கற்றல், பயன்பாடு என்பன மனித அறிதிறனை அடிப்படையாகக் கொண்டே விளக்கப்படுகின்றன என்பதே அறிதிற மொழியியலுக்கு அடிப்படையாக உள்ள வழிகாட்டற் கொள்கையாகும். அறிதிறன் என்பதே, மொழிக்கு மட்டுமன்றி, மனித அறிவுத்திறன் சார்ந்த எல்லா விடயங்களிலும் பயன்படுத்தப்படுவதற்கு அடிப்படையான மூளை சார்ந்த செயல்முறையாகும்.

பிரிவுகள்

அறிதிற மொழியியல் இரண்டு கற்கைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவ்விரு பிரிவுகளும் ஒன்றிலொன்று தங்கியிருப்பது புரிந்து கொள்ளபட்டிருப்பதன் காரணமாக இது தற்போது மீண்டும் ஒன்றிணைக்கப்படுகிறது. இவ்விரு பிரிவிகளாவன:

  • அறிதிற சொற்பொருளியல்
  • இலக்கணத்தை அறிதிறமுறையில் அணுகுதல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.