அர்ஜுன றணதுங்க
அர்ஜுன றணதுங்க (பிறப்பு - டிசம்பர் 1, 1963) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர். இவர் ஆனந்தக் கல்லூரியில் கல்விகற்றார். இடதுகைத் துடுப்பாளராகவும் மத்திம வேக சுழல் பந்தாளராகவும் விளையாடிய இவரது தலைமைத்துவத்திலேயே இலங்கை அணி 1996 இல் உலகக் கோப்பையை வென்றது. இவர் 2000 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
அர்ஜுன றணதுங்க | ||||
![]() | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
உயரம் | 5 ft 8 in (1.73 m) | |||
உயரம் | 1.85 m (6 ft 1 in) | |||
வகை | மட்டையாளர் | |||
துடுப்பாட்ட நடை | இடது கை | |||
பந்துவீச்சு நடை | வலது கை | |||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||
ஆண்டுகள் | அணி | |||
1982–2001 | சிங்கள விளையாட்டுக்கள் குழு (Sinhalese Sports Club) | |||
தரவுகள் | ||||
தே | ஒ.ப | |||
ஆட்டங்கள் | 93 | 269 | ||
ஓட்டங்கள் | 5,103 | 7,456 | ||
துடுப்பாட்ட சராசரி | 35.69 | 35.84 | ||
100கள்/50கள் | 4/38 | 4/49 | ||
அதியுயர் புள்ளி | 135* | 131* | ||
பந்துவீச்சுகள் | 2373 | 4710 | ||
விக்கெட்டுகள் | 16 | 79 | ||
பந்துவீச்சு சராசரி | 65.00 | 47.55 | ||
5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
சிறந்த பந்துவீச்சு | 2/17 | 4/14 | ||
பிடிகள்/ஸ்டம்புகள் | 47/– | 63/– | ||
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.இவர் 2015 செப்டம்பர் 4 அன்று துறைமுகங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு
50/4,C பெலவத்தை ரோட், நுகேகொடயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
மேற்கோள்கள்
- "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.
- http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html
- http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in
வெளி இணைப்புகள்
முன்னர் ரஞன் மடுகல்லே |
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் 1988/89-1999 |
பின்னர் சனத் ஜெயசூரிய |