அரை-இழுபட்ட நிலை (சுடுகலன்)

அரை-சுத்தி / அரை-இழுபட்ட நிலை (Half-cock) என்பது, சுடுகலனுடைய சுத்தியல்— முழுதுமாக அல்லாமல்— பாதி அளவிற்கு இழுக்கப்படிருக்கும் நிலையே ஆகும். பல சுடுகலன்கள், குறிப்பாக பழைய சுடுகலன்களின், அரை-இழுபட்ட நிலையை அடைய, சுத்தியலில் ஒரு காடி வெட்டப்பட்டிருக்கும். இந்த நிலையானது, வெடியூசி- பூட்டிய சுத்தியலை தட்டும் மூடி அல்லது வெடிபொதியின் மீதும் படவிடாது; துப்பாக்கியையும் வெடிக்க விடாது. அரை-இழுபட்ட நிலையை பயன்படுத்துவதன் நோக்கம்; சுடுகலனில் குண்டேற்றுவதற்காக, அல்லது பாதுகாப்பு அம்சமாக, அல்லது இவை இரண்டிற்காகவும் கூட இருக்கலாம்.[1][2] 

அரை-இழுபட்ட நிலையில் இருக்கும், கோல்ட் ஓரியக்க சுத்தியல் 

முற்கால உதாரணங்கள் 

சுத்தியல், அரை-இழுபட்ட நிலையில் உள்ளபோது மட்டுமே குண்டேற்ற முடியும், ரெமிங்டன்-ரைடர் எண்.22 பின்குண்டேற்ற புரிதுமுக்கியின் இயக்கத்தை காட்டும் படம்.
1. வெடித்த அடுத்த கணத்தில் ஆயுதம்.
2. வெடிபொதியை இடுவதற்கு திறக்கப்பட்டுள்ளது.
3. குண்டேற்றபாட்டு, அரை-சுத்தி நிலையில்.

முற்கால தீக்கல்லியக்கிகளின் கிண்ணியில்எரியூட்டியை இடுவதற்கு, அரை-இழுபட்ட நிலை தேவை பட்டது. கோல்ட் 1851 நேவி சுழல்துப்பாக்கி போன்ற, சிலவகை முற்கால சுழல்துமுக்கிகளில், சுத்தியலை அரை-இழுபட்ட நிலையில் வைத்தால் தான், உருள்கலனை சுற்றச்செய்து, அதில் குண்டேற்ற இயலும்.[3] இது போன்ற சுடுகலன்களில், இருக்கும் 6 அறைகளிலும் குண்டேற்றி, சுத்தியலை அரை-இழுபட்ட நிலையில் வைப்பதற்கு பதிலாக; வழக்கமான பாதுகாப்பு நோக்காமாக, ஆறில் 5 அறைகளில் மட்டும் குண்டேற்றப்பட்டு, இயல்பு-நிலை சுத்தியலை குண்டேற்றாத அறையில் வைப்பர்.[4]  

மேற்கோள்கள் 

  1. "Glossary". SAAMI. பார்த்த நாள் 11 June 2016.
  2. "Dropping the Hammer". Carbon Media Group (11 January 2010). பார்த்த நாள் 11 June 2016. "Any discussion about hammer guns and in what condition they are safe to carry invariably turns to the half-cock or safety notch."
  3. Hacker, Rick (24 September 2010). "Single-Action Secrets". Handguns (Outdoor Sportsman Group). http://www.handgunsmag.com/reviews/featured_handguns_single_091907/. பார்த்த நாள்: 11 June 2016.
  4. Campbell, Dave (22 April 2011). "How to Load a Single-Action Revolver". American Rifleman. https://www.americanrifleman.org/articles/2011/4/22/how-to-load-a-single-action-revolver/. பார்த்த நாள்: 12 June 2016. "This technique—load one, skip one, load the remaining chambers and come to full cock, then lower the hammer on an empty chamber—will work for any single-action revolver, regardless if it is a five-, six- or eight- or nine-shot cylinder."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.