அரு. ராமநாதன்

அரு. ராமநாதன் (சூலை 7, 1924 - 1974) தமிழக எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் மற்றும் திரைவசன கர்த்தா ஆவார். ரதிப்பிரியா, கு.ந.ராமையா ஆகிய பெயர்களிலும் எழுதினார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

அரு.ராமநாதன் சிவகங்கை மாவட்டம், கண்டனூரில் 1924 ஆம் ஆண்டில் பிறந்தார்.[1] சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார்.  இவரது முதல் படைப்பு  இவரது 18 வயதில் எழுதப்பட்ட சம்சார சாகரம். 1000ம் முறை மேடையேறிய "ராஜராஜ சோழன்" என்கிற நாடகத்தை 1945ம் ஆண்டு டி.கே.எஸ். சகோதர்கள் நடத்திய போட்டிக்கு அனுப்பினார். இது முதல்பரிசு பெற்றது. பின்னர் திரைப்படமாகவும் வந்தது. பெரும் விவாதத்தை எழுப்பிய "காதல்" என்கிற இதழை 1947இல் உருவாக்கி பிரசுரித்தார்.[2] இவர் எழுதிய  முதல் சிறுகதை   ‘கோழிப் பந்தயம்’ .தொடர்ந்து அம்பிகாபதி, பழையனூர் நீலி, நாயனம் சவுந்திர வடிவு, மனோரஞ்சிதம் என்ற  சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் புதினம் ‘அசோகன் காதலி’. இவரது உன்னதமான படைப்பாக கருதப்படும் "வீரபாண்டியன் மனைவி" பத்திரிக்கையில் ஏழு ஆண்டுகளாக தொடராக வந்தது. மூன்று பாகங்களில் பின்னர் நூலாக வெளிவந்தது.[1]

இவர் எழுதிய நாடங்கங்கள்: 'வெற்றி வேல் வீரத்தேவன்’, ‘வானவில்‘. ராஜராஜ சோழன் திரைப்படம் உட்பட ‘பூலோக ரம்பை’, ‘ஆரவல்லி’ ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

அரு.ராமநாதன் 1974-ல் மறைந்தார்.

படைப்புகள்

  • சிந்தனையாளர் பெஞ்சமின் பிராங்க்ளின்
  • அறுபது மூவர் கதைகள்
  • குண்டு மல்லிகை
  • போதிசத்துவர் கதைகள்
  • மதன காமராஜன் கதைகள்
  • ராஜராஜ சோழன்
  • விநாயகர் புராணம்
  • காலத்தால் அழியாத காதல்
  • அசோகன் காதலி
  • வீரபாண்டியன் மனைவி
  • அவ்வையார் பொன்மொழிகள்
  • விக்கிரமாதித்தன் கதைகள்
  • கிளியோபாட்ரா
  • சுந்தரரின் பக்தியும் காதலும்
  • வெற்றிவேல் வீரத்தேவன்
  • வேதாளம் சொன்ன கதைகள்
  • பழையனூர் நீலி
  • மகாகவி பாரதியார் பொன்மொழிகள்

மேற்கோள்கள்

  1. ராஜலட்சுமி சிவலிங்கம் (7-07-2016). "அரு. ராமநாதன்". தி இந்து. பார்த்த நாள் 7-04-2018.
  2. சாரு நிவேதிதா (7-06-2015). "அரு. ராமநாதன் (1924 – 1974)". தினமணி. பார்த்த நாள் 7-04-2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.