அரீனியசுச் சமன்பாடு

அரீனியசுச் சமன்பாடு (Arrhenius equation) என்பது வேதிவினைவேகத்தின் வெப்பநிலைச் சார்பைக் காட்டும் ஒரு வாய்பாடு ஆகும். யாக்கோபு என்றிக்கசு வான் தாஃபு என்னும் டச்சுக்காரரின் 1884ஆம் ஆண்டுப் பணியை ஒட்டி, 1889-இல் அரீனியசு இதனை முன்மொழிந்தார். இச்சமன்பாட்டிற்கு வினைவேகவியலிலும், செயலூக்க ஆற்றல் கணக்கிடவும் பெரும் பங்குண்டு.[1][2][3]

வரலாற்றடிப்படையில் பொதுவான கருத்தாகச் சொன்னால், அறைவெப்பத்தில் நிகழும் பரவலான சில வேதி வினைகளில், வெப்பநிலையில் ஒவ்வொரு 10 பாகை செல்சியசு அதிகரிப்பிற்கும், வினைவேகமானது இரட்டிக்கும்.[4]

சமன்பாடு

அரீனியசுச் சமன்பாட்டின் அடிப்படையில், வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க வினை வேக மாறிலியும் அதிகரிக்கும்.

இச்சமன்பாட்டைக் கீழ்க்கண்டவாறும் எழுதலாம்.

மேற்கோள்கள்

  1. Arrhenius, S.A. (1889). "Über die Dissociationswärme und den Einfluß der Temperatur auf den Dissociationsgrad der Elektrolyte". Z. Phys. Chem. 4: 96–116. doi:10.1515/zpch-1889-0108.
  2. Arrhenius, S.A. (1889). "Über die Reaktionsgeschwindigkeit bei der Inversion von Rohrzucker durch Säuren". ibid. 4: 226–248.
  3. Laidler, K. J. (1987) Chemical Kinetics,Third Edition, Harper & Row, p.42
  4. Pauling, L.C. (1988) General Chemistry, Dover Publications
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.