அரபா தினம்

அரபா தினம் (Day of Arafah, அரபி: يوم عرفة‎) இசுலாமிய நாட்காட்டி யில் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் 9 ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஹஜ் உடைய காரியங்கள் செய்வர்.ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும். [1]

அரபா தினம்
அதிகாரப்பூர்வ பெயர்அரபி: يوم عرفة‎
பிற பெயர்(கள்)மனந்திருந்துதல் நாள்,விண்ணப்பங்களின் ஏற்பு நாள்
வகைஇசுலாம்
முக்கியத்துவம்அரபா தினத்தில் இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் இறுதிப் பேருரை நடைபெற்றது.ஹஜ் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும்.
அனுசரிப்புகள்தொழுகை, நோன்பு, பாவ மன்னிப்பு கேட்டல்
முடிவுதுல் ஹஜ் மாதம் 9ம் தேதி
நிகழ்வுஆண்டுக்கொருமுறை

அரபா தினத்தின் சிறப்புகள்

  • அரபா தினம் ஹஜ் பெருநாளைக்கு முதல் தினம் ஆகும்.
  • அரபா தினத்தில் இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் இறுதிப் பேருரை நடைபெற்றது.[2]
  • அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பர்.
  • ஹஜ் செல்ல வசதி இல்லாதோர் அரபா தினத்தில் அவரவர் இடத்திலேயே நோன்பு வைப்பர்.

மேற்கோள்கள்

  1. Burton, Richard Francis, Sir, " Personal Narrative of a Pilgrimage to El-Medinah and Meccah"(2011), Cambridge University Press ISBN 9781108042000
  2. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=573937
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.