ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்

ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்றம் அல்லது ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசு (United States Congress) என்பது மேலவை (செனட்டு, Senate) மற்றும் கீழவை (அவுசு, House) என்னும் இரு பிரிவுகள் கொண்ட அமைப்பில் இயங்கும் உறுப்பினர்களைக் கொண்டதாகும். இந்த ஈரவை உறுப்பினர்களையும் கொண்ட கூட்டம் காங்கிரசு எனப்படும். இதுவே ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசின் சட்டமன்றம். இது ஈரவைச் சட்டமனற முறையைக் கொண்டதாகும்.

ஐக்கிய அமெரிக்கச் சட்டமன்றம்
United States Congress
116 ஆவது ஐக்கிய அமெரிக்கப் பேராயம்
வகை
நிறுவிய ஆண்டுமார்ச்சு 4, 1789 (1789-03-04)
வகைஈரவை
அவைகள்Senate
House of Representatives
புதிய அவை தொடக்கம்January 3, 2019
தலைமை
President of the Senateமைக்கு பென்சு
Mike Pence, (R)
January 20, 2017 முதல்
கீழவைத் தலைவர்நான்சி பலோசி, (மக்களாட்சிக் கட்சி (அமெரிக்கா))
January 3, 2019 முதல்
President pro tempore of the Senateசக்கு கிராசிலி
Chuck Grassley, (R)
January 3, 2019 முதல்
அமைப்பு
உறுப்பினர்கள்535 voting members
  • 100 senators
  • 435 representatives
6 non-voting members
மேலவை(செனட்டு) அரசியல் குழுக்கள்
  •      Republican (53)
  •      Democratic (45)
  •      Independent (2)[note 1]
சார்பாளர் மன்றம் அரசியல் குழுக்கள்
  •      Democratic (233)
  •      Republican (197)
  •      Independent (1)
  •      Vacant (4)
தேர்தல்
மேலவை(செனட்டு) இறுதித் தேர்தல்November 6, 2018
சார்பாளர் மன்றம் இறுதித் தேர்தல்November 6, 2018
கூடும் இடம்
United States Capitol
Washington, D.C.
United States of America
வலைத்தளம்
www.congress.gov

மக்களின் சார்பாளர்களைக் (பிரதிநிதிகளைக்) கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் அமெரிக்கன் சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

  1. The independent senators (Angus King and Bernie Sanders) formally caucus with the Democratic Party.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.