அபுரைட்டு
அபுரைட்டு (Abhurite) என்பது Sn3O(OH)2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வெள்ளீயம், ஆக்சிசன், ஐதரசன், குளோரின் ஆகிய தனிமங்களின் கனிமம் ஆகும்.[1] செங்கடல் கடற்கரையோரம் உள்ள ஜித்தா நகருக்கு அருகிலுள்ள சிறுகுடாவான சாரம் அபூரில் தரைதட்டிய கப்பலோரத்தில் வெள்ளீய பாளம் கண்டறியப்பட்டதால் இக்கனிமத்திற்கு அபுரைட்டு எனப்பெயரிடப்பட்டது. தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் மோவின் அளவுகோலில் அபுரைட்டின் கடின எண் 2 ஆகும்.
அபுரைட்டு Abhurite | |
---|---|
![]() அபுரைட்டின் பழுப்புநிற தட்டையான படிகங்கள், நார்வேயின் தெற்கு கடற்கரையோரம் தரைதட்டிய ஐதராவில் இருந்து கிடைத்தது | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Sn21O6(OH)14Cl16 |
மேற்கோள்கள்
- Richard V. Gaines, H. Catherine W. Skinner, Eugene E. Foord, Brian Mason, and Abraham Rosenzweig: "Dana's new mineralogy", p. 401. John Wiley & Sons, 1997
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.