அந்தோனியோ குத்தேரசு

அந்தோனியோ மானுவல் டி ஒலிவீரா குத்தேரசு (António Manuel de Oliveira Guterres GCL GCC (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ɐ̃ˈtɔnju ɡuˈtɛʁɨʃ]; பிறப்பு 30 ஏப்ரல் 1949)ஐக்கிய நாடுகள் அவையின் ஒன்பதாவது பொதுச் செயலாளர் ஆவார். எட்டாவது பொதுச் செயலாளர் பான் கி மூன் ஒய்வு பெற்றவுடன் 2017 சனவரி ஒன்று முதல் அப்பொறுப்பை இவர் ஏற்றார்.[1]போர்த்துக்கேய அரசியல்வாதியும் பேராளரும் ஆவார்; 1995ஆம் ஆண்டு முதல் 2002 வரை போர்த்துக்கல்லின் பிரதமராக இருந்தவர். இவர் அக்டோபர் 5, 2016இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சோசலிசக் கட்சிகளின் பன்னாட்டு அமைப்பிற்கு தலைவராகவும் இருந்துள்ளார்.[2] சூன் 2005 முதல் திசம்பர் 2015 வரை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையராகப் பணியாற்றினார்.

மாண்புமிகு
அந்தோனியோ குத்தேரசு
2014இல் குத்தேரசு
9வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்
அறிவிக்கை
பதவியேற்பு
1 சனவரி 2017
முன்னவர் பான் கி மூன்
10வது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையர்
பதவியில்
15 சூன் 2005  31 திசம்பர் 2015
பொதுச்-
செயலாளர்
கோபி அன்னான்
பான் கி மூன்
முன்னவர் ரட் லுப்பர்சு
பின்வந்தவர் பிலிப்போ கிராண்டு
போர்த்துக்கல்லின் 114வது பிரதமர்
பதவியில்
28 அக்டோபர் 1995  6 ஏப்ரல் 2002
குடியரசுத் தலைவர் மாரியோ சோரேசு
ஜார்ஜ் சாம்பையொ
முன்னவர் அனிபல் கவாகோ சில்வா
பின்வந்தவர் ஒசே மானுவல் பர்ரோசோ
பன்னாட்டு சோசலிச அமைப்பின் தலைவர்
பதவியில்
நவம்பர் 1999  சூன் 2005
முன்னவர் பியர்ரெ மோராய்
பின்வந்தவர் ஜார்ஜ் பாப்பன்ட்ரூ
போர்த்துக்கல் சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
23 பெப்ரவரி 1992  21 சனவரி 2002
குடியரசுத் தலைவர் அந்தோனியோ டி அல்மீடா சான்தோசு
முன்னவர் ஜார்ஜ் சாம்பையொ
பின்வந்தவர் எட்வர்டோ பெரோ ரோட்ரிகசு
தனிநபர் தகவல்
பிறப்பு அந்தோனியோ மானுவல் டி ஒலீவிரா குத்தேரசு
30 ஏப்ரல் 1949 (1949-04-30)
லிஸ்பன், போர்த்துக்கல்
அரசியல் கட்சி சோசலிசக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லூயிசா கீமைரைசு எ மெலோ
(தி. 1972–1998; இறப்பு)
கேத்தரீனா வாசு பின்டோ
(தி. 2001–நடப்பு)
பிள்ளைகள் பெத்ரோ
மரியானா
ஜார்ஜ்
படித்த கல்வி நிறுவனங்கள் லிசுபன் பல்கலைக்கழகம்
சமயம் உரோமைக் கத்தோலிக்கம்
இணையம் António Guterres

மேற்சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.