அதிஃப் அஸ்லம்
அதிஃப் அஸ்லம் உருது: عاطف اسلم 1983வது வருடம் மார்ச் மாதம் 11ம் தேதி பிறந்த மொஹம்மது அதிஃப் அஸ்லம் ஒரு பாகிஸ்தானிய பாப் பாடகர். அவர் வஜீராபாத்தில் பிறந்து லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய இடங்களில் கல்வி கற்றார். தெற்காசியாவில் பரவலாக அறியப்படுகின்ற அவர், ஆதத் , வோ லம்ஹே , தேரே பின் , பெஹலி நஜர் மே , தேரா ஹோனே லகா ஹூன் , து ஜானே நா மற்றும் மேரி கஹானி போன்ற பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் வோகல் பெல்டிங் எனப்படும் சக்தி மிகுந்த வகையில் உச்சக் குரலில் உணர்ச்சியுடன் பாடும் தனது உத்திக்காகப் பெயர் பெற்றுள்ளார்.
மொகமது அதிஃப் அஸ்லம் Muhammad Atif Aslam | |
---|---|
பிறப்பு | Wazirabad, Pakistan 12 மார்ச்சு 1983 |
இறப்பு | லாஹூர் பாக்கிஸ்தான் |
இசை வடிவங்கள் | ரொக் |
தொழில்(கள்) | Musician, Singer, Lyricist |
இசைக்கருவி(கள்) | கிட்டார் |
வெளியீட்டு நிறுவனங்கள் | Pakistan - Fire Records India - Tips |
இணையதளம் | http://www.aadeez.com/ |
உறுப்பினர்கள் | Asad Mobeen Shah Sameer Rasheed |
முன்னாள் உறுப்பினர்கள் | Mahmood Rehman Omer Nadeem Haider Haleem |
வாழ்க்கை வரலாறு
ஆரம்ப கால வாழ்க்கை
அஸ்லம் பாகிஸ்தானில் வஜிராபாத்தில் பிறந்தார். அவரது விளையாட்டுப் பள்ளிப் பருவம் லாகூரின் மாடல் டவுனில் உள்ள கிம்பர்லி ஹால் பள்ளியில் துவங்கியது. அவர் முதலாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதன் முதலாக மேடையில் ஒரு மாறு வேடப் போட்டிக்காகத் தோன்றினார். இதில் அவர் இம்ரான் கானாக (பாகிஸ்தான் துடுப்பாட்டக் குழுவின் தலைவர்) வேடமிட்டிருந்தார். அதற்குப் பிறகு துடுப்பாட்டம் என்பதே அவரது ஆர்வமானது. அச்சமயம், எந்தக் குறிப்பிட்ட வகைப் பாடலையும் அவர் கேட்டதில்லை.
ஒன்பதாவது வயதில் அவர் ராவல்பிண்டிக்குச் சென்று அங்கு செயிண்ட் பால்'ஸ் கேம்ப்ரிட்ஜ் பள்ளியில் படித்தார். 1995வது வருடம் லாகூருக்குத் திரும்ப வந்தார்; அங்கு அவர், லாகூர் மாடல் டவுனில் உள்ள டிவிஷனல் பப்ளிக் பள்ளியில் (டிபிஎஸ்) தனது படிப்பைத் தொடர்ந்தார். ஒரு பந்து வீச்சாளராகப் பள்ளி மரப்பந்தாட்டக் குழுவில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது 14வது வயதிலேயே பத்தாம் வகுப்பை முடித்து விட்டார். எப்போதுமே, அவர்தான் வகுப்பில் மிகவும் இளையராக இருந்தார். இதன் காரணம் அவர் கிம்பர்லி ஹாலில் படித்தபோது பெற்ற இரட்டை உயர்வுகள்தாம். இந்தக் காலகட்டத்தில் ஒரு தொழில் முறை துடுப்பாட்ட வீரராக வருவதிலேயே தனது முயற்சிகள் அனைத்தையும் அவர் செலுத்தி வந்தார். அவர் தனது மேல் நிலைப் பள்ளித் தேர்வுகளை முடித்ததும், டிபிஎஸ்ஸை விட்டு நீங்கினார். அவர் மேசைப் பந்து விளையாட்டும் விளையாடியுள்ளார். பிறகு அவர், லாகூர் நகரில் உள்ள பிஏஎஃப் கல்லூரியில் தமது கல்வியைத் தொடர்ந்தார். இங்கு அவர் 2001வது வருடம் தமது எஃப்.எஸ்சி படிப்பை முடித்தார். அதன் பின்னர் அவர் (மத்திய பஞ்சாப் பல்கலைக் கழகத்தின்) பிசிபிஏ/பிஐசிஎஸ்சிலிருந்து கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]
கல்வி நிலை
- ஆரம்பகாலப் பள்ளிகள்
-
- வகுப்பு 1லிருந்து 3 வரை: கிம்பர்லி ஹால் மாடல் டவுன் லாகூர் ஹெச்ஓ;;ஓ
- வகுப்பு 4லிருந்து 8 வரை: செயிண்ட் பால் பள்ளி சேடிலைட் டவுன் ராவல்பிண்டி
- வகுப்பு 9லிருந்து 10 வரை: டிவிஷன் பப்ளிக் பள்ளி மாடல் டவுன் லாகூர்
- பள்ளியில் பெற்ற தனிச் சிறப்புக்கள்
- இரட்டை உயர்வுகள் பெற்றதால், எப்போதுமே தமது வகுப்பில் மிகச் சிறிய வயதுச் சிறுவனாகவே இருந்தார்.
- பள்ளி துடுப்பாட்ட விளையாட்டுக் குழுவில் முதன்மையான தாக்குப் பந்து வீச்சாளராக இருந்தார்.
- கல்லூரி
-
- பொறியியலுக்கு முந்தைய எஃப்.எஸ்சி: பிஏஎஃப் இண்டர்மீடியட் காலேஜ், லாகூர் கண்டோன்மெண்ட்
- கல்லூரியில் பெற்ற தனிச் சிறப்புக்கள்
- கல்லூரி துடுப்பாட்டக் குழுவின் முதன்மை தாக்குப் பந்து வீச்சாளராக இருந்தார். பல நகரங்களிலும் தமது கல்லூரியின் சார்பாக விளையாடி, இறுதியில் பாகிஸ்தான் தேசிய துடுப்பாட்ட விளையாட்டுக் குழுவில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான குழுவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்லூரியில் சுதந்திர தினத்தன்று நிகழ்ந்த பாட்டுப் போட்டியில் தமது முதல் பரிசை வென்றார்.
- பல்கலைக் கழகம்
-
- பிசிஎஸ் (ஹானர்ஸ்): மத்திய பஞ்சாப் பல்கலைக் கழகம்.
- பல்கலைக் கழகத்தில் பெற்ற தனிச் சிறப்புக்கள்
- கல்லூரியில் நிறைய பாட்டுப் போட்டிகளில் வென்றார்.
இசைத்துறை வாழ்க்கை
ஜல்
கல்லூரி உணவு விடுதியில் பாடிக் கொண்டிருப்பது அவர் வழக்கம். 1998வது வருடம் சுதந்திர தினத்தன்று லாகூர் பிஏஎஃப் கல்லூரியில் நிகழ்ந்த பாட்டுப் போட்டியில் பங்கேற்குமாறு அவரது நண்பர்கள் அவரை வற்புறுத்தினர். அந்தப் போட்டியில் அவர் இசைபாடி வெற்றியடைந்தார். அதன் பின்னர், பிற கல்லூரிகளில் நிகழ்ந்த போட்டிகள் பலவற்றிலும் அவர் வென்றார்.
தமது கல்லூரியில் அவர், பிற்காலத்தில் ஜல் இசைக்குழுவில் தம்முடன் இருந்த, கொஹெர் என்னும் கிதார் இசைக் கலைஞரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயிற்சி செய்து தமது நண்பர்களுக்காக சிறிய இசைக் கச்சேரிகளை, அவர்கள் கேட்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அரங்கேற்றத் துவங்கினர். இந்த இசை நிகழ்ச்சிகளில் அதிஃப் ஜுனூன் மற்றும் ஸ்ட்ரிங்ஸ் பாடல்களைப் பாடி வந்தார். அவர்கள் தமது கல்லூரி, மெக்டொனால்ட், அங்கிள் பப்பா'ஸ் ரப்பா டப்பா மற்றும் இதர உணவகங்களில் இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தத் துவங்கினர். இவ்வாறுதான் ஜல் இசைக் குழுவின் தோற்றம் உருவானது.
மெகல் ஹஸனின் ஒலிப்பதிவுக் கூடத்தில் ஆதத் என்னும் பாடலை ஜல் குழு பதிவு செய்தது. இது பாகிஸ்தானின் பல்வேறு இசை வலைத் தளங்களிலும் மிகுந்த பிரபலம் அடைந்தது. மேலும், சிட்டி எஃப்எம் 89, எஃப்எம் 100, மஸ்த் எஃப்எம் 103, எஃப்எம் 105 போன்ற பல முதன்மையான வானொலிகளிலும் இந்தப் பாடல் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. இந்தப் பாடலின் ஒளிக் காட்சி ஆரி டிஜிடல் மற்றும் தி மியூசிக் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது. இதன் பிறகு அநேகமாக அனைத்து அலைவரிசைகளிலும் இது ஒளிபரப்பானது.
சர்ச்சை
ஜல் குழு ஆதத் பாடலை வெளியிட்ட பிறகு, அந்தக் குழுவின் மேலாளராக அதிஃபின் சகோதரர் இருப்பதைப் பற்றிக் குழுவினருள் மோதல்கள் நிகழத்துவங்கின. இந்தக் கட்டத்தில் அதிஃப், தனியிசையாக ஒரு இசைத் தொகுப்பை வெளியிட அந்த இசைக் குழுவை விட்டு விலகினார். புதிய ஜல் குழுவின் (கொஹெர் மும்தாஜ், ஃபர்ஹான் சயீத், ஷாஜி) ஆதத் வெளியாவதற்குச் சில வாரங்களுக்கு முன்பாக அவரது தனியிசைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. ஜல் குழுவின் ஆதத் மற்றும் அதிஃபின் இசைத் தொகுப்பான ஜல்பரி ஆகிய இரண்டுமே (ஆதத் , வோ லம்ஹே , ரங்கோன் மே மற்றும் தில் ஹாரே போன்ற) சில இசைத் தடங்களைப் பொதுவாகக் கொண்டிருந்தன. இதனால், பாடல்களின் உரிமத்திற்காக இரண்டு குழுக்களுக்கும் இடையில் அறிவிக்கப்படாத போர் ஒன்று துவங்கியது.
ஜல் பரி (கடல் கன்னி என்று இது பொருள்படும்) என்று தனது இசைத் தொகுப்பிற்குத் தலைப்புக் கொடுத்து ஜல் என்னும் பெயரைத் தந்திரமாகப் பயன்படுத்தியதாக கொஹர் மும்தாஜ் அதிஃப் அஸ்லத்தின் மீது வழக்குத் தொடுத்தார் பாகிஸ்தானில் காப்புரிமைச் சட்டங்கள் தெளிவற்றவை. (ஒரு படைப்பின் பெயரை மட்டும் மாற்றி விட்டு அதன் உட்கருத்தைத் தங்கள் சொந்தச் சொத்தாகவே யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம்). இந்த வழக்கு கொஹெர் முஜ்தாஜ் தரப்புக்கு ஆதரவாக முடிந்தது. இவர், அதிஃப் தாம் புகழ் பெறுவதற்காகப் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களின் மீதும் சட்டபூர்வமான உரிமையைப் பெற்றார்.
தனியிசைத் தொழில் வாழ்க்கை
அதிஃப் ஜல்பரி என்னும் தனது முதல் இசைத் தொகுப்பை 2004வது வருடம் ஜூலை 19ம் தேதி சௌண்ட் மாஸ்டர் மற்றும் ஐசி ரெகார்ட்ஸ் என்பவற்றின் கீழ் வெளியிட்டார். இது வெளியாகி ஐந்து மாதங்களுக்குள்ளாகவே இதன் சந்தைப்பணி முன்னேற்றத்தில் ஈடுபட்டிருந்தோர், இதை அந்த வருடத்தின் மிக அதிக விற்பனையாகும் இசைத் தொகுப்பு என்று அறிவித்தனர்.[2] . இதற்கு இடைப்பட்ட நேரத்தில், தனது அதிஃப் கணினி அறிவியல் (ஹானர்ஸ்) படிப்பையும் மத்திய பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் முடித்து விட்டிருந்தார். 2007வது வருடம் ஏப்ரல் மாதம் 14 அன்று ராயல் ஆல்பர்ட் ஹால் என்னுமிடத்தில் அதிஃப் அஸ்லம் தனது நிகழ்ச்சியை நடத்தினார். அவரது இரண்டாவது இசைத் தொகுப்பான தூரி 2006வது வருடம் டிசம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது.
அண்மையில், அஜப் பிரேம் கி கஜப் கஹானி என்னும் ஒரு பாலிவுட் திரைப்படத்திற்காக, அதிஃப் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். தேரே ஹோனே லகா ஹூன் மற்றும் து ஜானே நா என்னும் அந்த இரண்டு பாடல்களும் இந்திய நேயர்களால் நல்ல முறையில் வரவேற்கப்பட்டுள்ளன. ரேஸ் என்னும் பாலிவுட் படத்திற்காக பெஹலே நஜர் மே என்னும் பாடலையும் மற்றும் கிஸ்மத் கனெக்ஷன் என்னும் பாலிவுட் படத்திற்காக பகுதா தும் ஹி ஹோ என்னும் பாடலையும் அதிஃப் பாடியுள்ளார்.
தொழில் வாழ்க்கையின் சிறப்பு அடையாளங்கள்
- அறிமுகப் பாடல் பதிவானது : ஆதத் ஜல் எழுதியது (மேகல் ஹசன் ஒலிப்பதிவுக் கூடம்) டிசம்பர் 2002.
- அறிமுக ஒளிக்காட்சி : ஆதத் ( கராச்சியில் உமர் அன்வர் இயக்கியது)
- ஆரம்ப கால இசை நிகழ்ச்சி நடந்த இடங்கள் : கல்லூரி உணவு விடுதி, உணவு விடுதிகள்,நண்பர்களின் இடங்கள் முதலியவை.
- முதல் பெரும் இசை நிகழ்ச்சி : அல் ஹம்ரா ஹால், மால் சாலை லாகூர்; மௌலின் ரோஜ் என்னும் மேடை நாடகத்தின் இடைவேளையின்போது நிகழ்த்தினார்.
- இசைப் பிரிவு : பாப், ராக், பாலிவுட் திரைப்படங்களில் பின்னணி பாடுதல்
- தனி இசைத் தொகுப்புகள்
-
- முதல் இசைத் தொகுப்பு : ஜல்பரி
- பாகிஸ்தானில் வெளியிடப்பட்ட இசைத் தொகுப்பு: 17 ஜூலை 2004
- வெளியீட்டார்: சௌண்ட் மாஸ்டர், ஐசி ரெகார்ட்ஸ்
- வெளியிடப்பட்டதிலிருந்து இசைத் தொகுப்பின் விற்பனை: மூன்று மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள்
- முதல் ஒளிக்காட்சி இசைத் தொகுப்புகள் : ஆதத் , மஹி வே , ரங்கோன் மே , பீகீ யாதேன் , யகீன்
-
- இரண்டாவது இசைத் தொகுப்பு : தூரி
- உலகெங்கிலும் இசைத் தொகுப்பு வெளியிடப்பட்ட தினம்: 20 டிசம்பர் 2006
- அது சாலையோரக் கவிகளின் நடுத்தரமான கவிதை முயற்சியாக இருந்தது; அதில் அதிஃபினுடையது என்று ஏதும் இருக்கவில்லை.
- வெளியீட்டார்: டிப்ஸ், ஆரி
- இரண்டாவது ஒளிக்காட்சி இசைத் தொகுப்புக்கள் : தூரி மற்றும் மறுகலவை, ஹம் கிஸ் கலி ஜா ரஹே ஹைன் , எஹசாஸ்
-
- இசைத் தொகுப்பின் சிறப்பு அடையாளங்கள்
- 2006வது வருடம் டிசம்பர் மாதம் "தூரி" உலகெங்கிலும் ஒரே நேரத்தில் வெளியீடானது.
- பாகிஸ்தான், இந்தியா மற்றும் யூஏஈ ஆகிய நாடுகளில், அனைத்துப் புதிய பாப் இசைத் தொகுப்புகளிலும் மிக அதிக விற்பனையாகும் பாப் இசைத் தொகுப்பு.
-
- மூன்றாவது இசைத் தொகுப்பு : மேரி கஹானி
- உலகெங்கிலும் இசைத் தொகுப்பு வெளியிடப்பட்ட நாள் :18 ஜனவரி 2008
- வெளியீட்டார்:டிப்ஸ், ஃபயர் ரெகார்ட்ஸ்
- வெளியிடப்பட்டதிலிருந்து இசைத் தொகுப்பின் விற்பனை: உலகெங்கும் 800,000 பிரதிகள்
- மூன்றாவது ஒளிக்காட்சி இசைத் தொகுப்புகள் : ஹங்காமி ஹாலாத் , மேரி கஹானி , ரப்பா சச்சியா , க்யூ சோர் கே , கினாரா
-
- இசைத் தொகுப்பின் சிறப்பு அடையாளங்கள்
- இன்று உலகெங்கும் சிறந்த அளவில் விற்பனையாகும் இசைத் தொகுப்புகளில் மேரி கஹானி யும் ஒன்று. வெளியிடப்பட்டது முதல் இன்றுவரை அது 800,000 பிரதிகள் விற்றிருக்கிறது.
-
- நாலாவது இசைத் தொகுப்பு :ப்யாஸ் என்னும் பெயரிட்டு நாலாவது இசைத் தொகுப்பு ஒன்றை அவர் வெளியிடுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இதை அதிஃப் மறுத்து விட்டார். சுற்றுச் சூழல் பற்றிய ஒரு ஒளிக் காட்சித் தொகுப்பில் தாம் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.
பாலிவுட்டில் தனிப் பாடல்கள்
ஆண்டு | பாடல் | திரைப்படம் |
---|---|---|
2005 | வோ லம்ஹே | ஜெஹர் |
ஆதத் | கல்யுக் | |
2006 | தேரே பின் | பஸ் ஏக் பல் |
2008 | பெஹலி நஜர் மே | ரேஸ் |
பகுதா தும் ஹி ஹோ | கிஸ்மத் கனெக்ஷன் | |
2009 | ' தேரா ஹோனே லகா ஹுன் | அஜப் பிரேம் கி கஜப் கஹானி |
து ஜானே நா | அஜப் பிரேம் கி கஜப் கஹானி | |
2010 | தேரே லியே (விரைவில் வெளிவரவுள்ளது)
|
பிரின்ஸ் - இட்'ஸ் ஷோ டைம் |
ஆ பீ ஜா சனம் (விரைவில் வெளிவரவுள்ளது) |
பிரின்ஸ் - இட்'ஸ் ஷோ டைம் | |
கோன் ஹூன் மை
(விரைவில் வெளிவரவுள்ளது) |
பிரின்ஸ் - இட்'ஸ் ஷோ டைம் | |
ஓ மேரே குதா
(விரைவில் வெளிவரவுள்ளது) |
பிரின்ஸ் - இட்'ஸ் ஷோ டைம் |
விருதுகள்
ஆண்டு | பிரிவு | விருது | முடிவு |
---|---|---|---|
2005 | இண்டஸ் இசை விருதுகள் | சிறந்த பாடல்கள் ஆதத் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
இண்டஸ் இசை விருதுகள் | சிறந்த பாடல் ஆதத் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
இண்டஸ் இசை விருதுகள் | சிறந்த இசையமைப்பு
ஆதத் |
style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சஹாரா சங்கீத் விருதுகள் | சிறந்த பின்னணிப் பாடகர் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
சஹாரா சங்கீத் விருதுகள் | சிறந்த அறிமுகப் பாடகர் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
2006 | தி மியூசிக் விருதுகள் | மிகவும் வேண்டப்படும் ஆடவர் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
லக்ஸ் ஸ்டைல் விருதுகள் | சிறந்த இசைத் தொகுப்பு தூரி | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
பிலிம்ஃபேர் விருதுகள் | சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) ஓ லம்ஹே - ஜெஹர் | பரிந்துரை | |
2007 | லைக்ரா எம்டிவி ஸ்டைல் விருதுகள் | இசையுலகில் மிகவும் நவ நாகரிகமான நபர் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
பிலிம்ஃபேர் விருதுகள் | சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) தேரே பின் - பஸ் ஏக் பல் | பரிந்துரை | |
2008 | லக்ஸ் ஸ்டைல் விருதுகள் | மிகவும் சிறந்த முறையில் உடுத்தும் பிரபலம் - காவல்துறை உடுப்பு | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
தி மியூசிக் விருதுகள் | மிகவும் வேண்டப்படும் ஆடவர் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி | |
பாகிஸ்தானிய அரசு | தம்கா-ஈ-இம்தியாஜ் (சிறப்புத் தகுதிப் பதக்கம்) | விருதளிக்கப்பட்டது | |
2009 | சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் | சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) பெஹலி நஜர் மே - ரேஸ் | பரிந்துரை |
ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் | சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) பெஹலி நஜர் மே - ரேஸ் | பரிந்துரை |
குறிப்புகள்
- ஹெச்டிடிபி:டபிள்யூடபிள்யூடபிள்யூ.அதிஃப்அஸ்லம்.ஓஆர்ஜி/
- தனிக் குரலிசை அதிஃப் அஸ்லம்
புற இணைப்புகள்
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் அதிஃப் அஸ்லம்
- அதிஃப் அஸ்லமின் அதிகாரபூர்வமான வலைத்தளம்
- அதிஃப் அஸ்லம் பிஸ்
- அதிஃப் அஸ்லம் "போல்" என்னும் பாகிஸ்தானிய திரைப்படத்தில் நடிக்கத் தேர்வு.
- அதிஃப் அஸ்லம் வலைப்பூ
- அதிஃப் அஸ்லம் மன்றம்
- ஒலிநாடாத் தொகுப்புகள்
- அதிஃப் அஸ்லம் இசைப் பித்து புதிய பார்வை
- அதிஃப் அஸ்லமின் சமீபத்திய வலைத்தளம்
- அதிஃப் அஸ்லம் ரசிகர்களின் வலைத்தளம்
- அதிஃப் அஸ்லமின் தாரா ஹோனே லகா ஹூன் பாடல்
- தாரா ஹோனே லகா ஹூன் (முழு ஒளிக்காட்சி-கணினி ஒளிக்காட்சி கீழிறக்கம்
- து ஜானே நா (முழு ஒளிக்காட்சி-கணினி ஒளிக்காட்சி கீழிறக்கம்
- முகம்மது அத்திஃப் அஸ்லம் சிறந்த சேகரிப்பு