அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்

அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) அல்லது(NNPT) அல்லது அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தம், அணுக்கரு ஆயுதங்கள் உருவாவதை தடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்[1]. 1968 இயற்றப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் 189 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா,பாக்கித்தான், இசுரேல், வட கொரியா, தெற்கு சூடான்ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை.

அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம்
கையெழுத்திட்டது 1 சூலை 1968
இடம் நியூ யார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
நடைமுறைக்கு வந்தது 5 மார்ச் 1970
நிலை ஏற்புறுதி ஐக்கிய இராச்சியம், உருசியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், மற்றும் 40 பிற நாடுகள்.
தரப்புகள் 190

தொடக்கத்தில் வட கொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பிறகு அதை மீறியது. இறுதியாக 2003ல் இந்த அமைப்பில் இருந்து விலகிக்கொண்டது.

வரையீடுகள்

அணுக்கருப் பரவாமை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகள்
  கையொப்பமிட்டு ஏற்புறுதி கொண்டவை
  ஒப்புக்கொண்டவை
  ஒப்பந்தப்படி நடக்கும் நாடு
(தைவான்)
  விலக்கப்பட்டது
(வட கொரியா)
  கையொப்பமிடாதவை
(இந்தியா, இசுரேல், பாக்கித்தான்)

இந்த ஒப்பந்தத்தின்படி சீனா,பிரான்சு,ஐக்கிய இராச்சியம்,ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் உருசியா என்ற ஐந்து நாடுகள் மட்டுமே அணுக்கரு ஆயுதங்களை வைத்திருக்க அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. சனவரி 1 1967 ஆம் நாளிற்கு முன்னால் அணுவாயுதம் தயாரித்த நாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுத நாடுகள் என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுதங்களை தயாரிக்க மற்றநாடுகளுக்கு உதவ மாட்டோம் என உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.பிற நாடுகள் தாங்கள் அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்றும் மற்றவர்கள் தயாரிக்க உதவ மாட்டோம் என்றும் கையொப்பமிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் அணுக்கரு உலைகள் கட்டவும் அணுவாற்றலை அமைதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.[2]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://www.state.gov/documents/organization/141503.pdf
  2. https://www.iaea.org/Publications/Documents/Infcircs/Others/infcirc140.pdf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.