அட்லஸ் (எலும்பு)
மனித உடலில் மண்டையோட்டைத் தாங்கி நிற்பது முள்ளந்தண்டு நிரல் ஆகும். மனித உடலில் மொத்தம் உள்ள 33 முள்ளந்தண்டெலும்புகளில் (கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்-7, நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்-12, நாரி முள்ளந்தண்டெலும்புகள்-5, திருவெலும்பு-5, வாலெலும்பு-4) முதலாவது கழுத்து முள்ளந்தண்டெலும்பு அட்லசு எனவும் இரண்டாவது கழுத்து முள்ளந்தண்டெலும்பு ஆக்சிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. அட்லசு கபால எலும்புகளில் ஒன்றான ஆக்சிபிட்டல் எலும்புடன் இணைந்து இயங்கி வருகிறது. அத்தகைய சிரசைத் தாங்கி நிற்கும் கழுத்து முள்ளந்தண்டெலும்பு அட்லசின் நினைவாக அவன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.[1]

அட்லசு முதல் முள்ளந்தண்டெலும்பு
மேற்கோள்கள்
- Varela-Lasheras, Irma; Bakker, Alexander J; Van Der Mije, Steven D; Metz, Johan AJ; Van Alphen, Joris; Galis, Frietson (2011). "Breaking evolutionary and pleiotropic constraints in mammals: On sloths, manatees and homeotic mutations". Evo Devo 2: 11. doi:10.1186/2041-9139-2-11. பப்மெட்:21548920. Lay summary – ScienceDaily (May 6, 2011).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.