அடிலைட்டு

அடிலைட்டு (Adelite) என்பது CaMgAsO4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வகை கனிமம் ஆகும். கால்சியம், மக்னீசியம் ஆர்சனேட்டுகள் இக்கனிமத்தில் கலந்துள்ளன. வனேடியத்தைக் கொண்டிருக்கும் கனிமமான கோட்லோபைட்டுடன் சேர்ந்த திண்மக் காரைசல் வரிசையாக இது உருவாகிறது. பல்வேரு இடைநிலைத் தனிமங்கள் மக்னீசியத்திற்குப் பதிலாக இடம்பெற்றும், கால்சியத்தை இடப்பெயர்ச்சி செய்து ஈயம் இடம்பெற்றும் இதைப்போல பல்வேறு வகை கனிமங்கள் டப்டைட்டு குழு கனிமமாக உருவாகின்றன.

அடிலைட்டுAdelite
பொதுவானாவை
வகைஅடிலைட்டு-டெசுகுளோய்சைட்டு குழு
வேதி வாய்பாடுCaMg(AsO4)(OH)
இனங்காணல்
நிறம்நிறமற்றது, வெண்மை, சாம்பல், சாம்பல் நீலம், சாம்பல் மஞ்சள், மஞ்சள், வெளிர் பச்சை, இளம் செம்பழுப்பு, பழுப்பு
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்புகண்டறியப்படவில்லை
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுஉயவுத்தன்மையும் கண்ணாடிப் பளபளப்பும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், கசியும்
ஒப்படர்த்தி3.73 to 3.79
மேற்கோள்கள்[1]

நீலம், பச்சை, மஞ்சள், சாம்பல் போன்ற வேறுபட்ட நிறப் படிகங்களாக செஞ்சாய்சதுர வடிவில் குறிப்பாக பெருத்த அளவுகளில் அடிலைட்டு உருவாகிறது. மோவின் அளவுகோலில் இதன் கடினத்தன்மை அளவு 5 என்றும் ஒப்படர்த்தி 3.73 முதல் 3.79 வரை என்றும் அளவிடப்பட்டுள்ளன.

சுவீடன் நாட்டிலுள்ள வர்மலேண்டு மாகானத்தில் 1891 ஆம் ஆண்டு முதன்முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது. தெளிவில்லாத என்ற பொருள் கொண்ட கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து அடிலைட்டு என்ற பெயர் பெறப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.