அஞ்சலகம்

அஞ்சலகம் (Post Office; தபால் நிலையம்) என்பது அஞ்சல்களைப் (தபால்) போடுதல், வாங்குதல், பிரித்தல், கையாளுதல், அனுப்புதல், வழங்குதல் ஆகியப் பணிகளைச் செய்யும் அஞ்சல் அமைப்பின் ஒரு பகுதியாக விளங்கும் ஒரு இடமாகும்[1].

தமிழ்நாடு, சேலத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம்
இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டில் உள்ள ஒரு அஞ்சல் நிலையம்
கொல்கத்தாவிலுள்ள பொது அஞ்சலகத்தின் உட்புறத் தோற்றம்
பொது அஞ்சலகம், மும்பை

அஞ்சலகங்கள் தபால் சம்பத்தப்பட்டச் சேவைகளான அஞ்சல்களை பெற்று கொள்ளுதல், துரித அஞ்சல் சேவை, அஞ்சல் தலைகள், அஞ்சலட்டைகள், எழுது பொருள்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் பணிகளையும் செய்கின்றன. சில அஞ்சலகங்கள் தபால் சம்பந்தபடாத சேவைகளான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விண்ணப்பங்கள், பிற அரசாங்கப் படிவங்கள் வழங்குதல், மகிழுந்து (கார்) வரிகளை வாங்குதல், பணவிடைகள் (பண அஞ்சல்கள்) அனுப்புதல், வங்கித்தொழில் பணிகள் போன்றவற்றையும் செய்கின்றன. தற்பொழுது இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்கள் மூலம் ஓய்வூதியம், பிறப்பு- இறப்பு சான்றிதழ், வங்கிகளில் பணம் செலுத்துவது மற்றும் ரயில் பயணத்துக்கான பயணச் சீட்டு முன்பதிவு போன்ற திட்டங்களை நடை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது[2].

மேற்கோள்கள்

  1. "Canada Postal Guide - Glossary". Canada Post. மூல முகவரியிலிருந்து 2007-08-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-10-08.
  2. "அஞ்சல் நிலையம் மூலம் ஓய்வூதியம், பிறப்பு- இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம்". விடுதலை நாளிதழ். பார்த்த நாள் 2012-06-30.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.