அஜித் ஜெயின்

அஜித் ஜெயின் (Ajit Jain, சூலை 23, 1951, ஒரிசா, இந்தியா) என்பவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் தற்போது பெர்க்சைர் ஹத்தவேக்கான (Berkshire Hathaway)[1] பல்வேறு மறுகாப்பீட்டுத் தொழில்களுக்குத் தலைமை வகிக்கின்றார்.

அஜித் ஜெயின் இந்தியாவின் கடலோர மாநிலமான ஒரிசாவில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டில் கரக்பூரில் உள்ள இந்தியத் தொழினுட்பக் கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்று பட்டதாரியானார். 1973 முதல் 1976 வரை ஜெயின் இந்தியாவில் ஐபிஎம் இல் பணிபுரிந்தார். 1978 ஆம் ஆண்டில் அவர் ஹார்வர்டு வணிகப் பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மையை படித்த பின் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் சேர்ந்தார். ஆனால் 1980களின் முற்பகுதியில் இந்தியாவிற்குத் திரும்பினார். ஒரு மாதம் பெண்தேடிய பின்னர் அவரது பெற்றோர்கள் தேர்ந்தெடுத்த டிங்கு ஜெயின் என்பவரைத் திருமணம் செய்தார். பின்னர் மீண்டும் பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் வேலை செய்வதற்காக அமெரிக்காவிற்குத் திரும்பினார். ராபர்ட் பி. மைல்ஸின் (*Robert P. Miles) புத்தகமான த வாரன் பஃபே சீஇஒ: பேர்தச் மேலாளர்களின் இரகசியங்கள் (The Warren Buffett CEO: Secrets from the Berkshire Hathaway Managers) ஐப் பொறுத்தவரை, அஜித் ஜெயின் இனி அமெரிக்கா திரும்பப் போவதில்லை எனக்கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி அங்கு செல்வதற்கு ஆர்வமாய் இருந்தார்.[2] 1986 ஆம் ஆண்டில் வாரன்பபெட்டுக்காக காப்பீடு செயல்திட்டங்களில் வேலை செய்வதற்காக பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் இருந்து ஜெயின் வெளியேறினார். அந்த நேரத்தில் அவருக்கு காப்பீட்டுத் தொழில் பற்றி சிறிதளவே தெரியும் எனக்கூறியிருந்தார்.[3] தற்போது பெர்க்சைரின் இந்திய காப்பீட்டு சந்தை தொழில் நிறுவனத்திற்கு தலைமை வகிக்கின்றார்.[4]

கூடுதல் வாசிப்பு

  • Miles, Robert P., "The Warren Buffett CEO: Secrets from the Berkshire Hathaway Managers," John Wiley & Sons Inc., 2003.
  • Matthews, Jeff, "Secrets in Plain Sight: Business and Investing Secrets of Warren Buffett," eBooks On Investing, 2012.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.