அசான் பிரியஞ்சன்
அசான் பிரியஞ்சன் (Ashan Priyanjan, பிறப்பு:14 ஆகத்து 1989) இலங்கைத் துடுப்பாட்ட அணியில் விளையாடும் துடுப்பாட்ட, மற்றும் பந்து வீச்சாளர் ஆவார். இவர் 2008 இல் மலேசியாவில் நடைபெற்ற 19-வயதிற்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் தலைவராகப் பங்குபற்றினார். 19-வயதுக்குட்பட்டோருக்கான 2006 உலகக்கிண்ணப் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார்.
அசான் பிரியஞ்சன் சுபசிங்க Ashan Priyanjan Subasinghe | ||||
![]() | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
முழுப்பெயர் | சுபசிங்க முதலியன்செலாகே அசான் பிரியஞ்சன் | |||
உயரம் | 5 ft 6 in (1.68 m) | |||
உயரம் | 1.68 m (5 ft 6 in) | |||
வகை | அனைத்துஆட்டக்காரர் | |||
துடுப்பாட்ட நடை | வலக்கை | |||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தர-வேகம் | |||
அனைத்துலகத் தரவுகள் | ||||
முதல் ஒருநாள் போட்டி | 25 டிசம்பர், 2013: எ பாக்கித்தான் | |||
கடைசி ஒருநாள் போட்டி | 27 டிசம்பர், 2013: எ பாக்கித்தான் | |||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||
ஆண்டுகள் | அணி | |||
2008/09–இன்று | தமிழ்ச் சங்க துடுப்பாட்ட, தடகள மன்றம் | |||
2007/08–2009/10 | ருகுண துடுப்பாட்ட அணி | |||
2007/08 | புளூம்ஃபீல்ட் துடுப்பாட்ட அணி | |||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
ஒரு | முதல் | ப.ஏ. | இ20 | |
ஆட்டங்கள் | 2 | 56 | 69 | 24 |
ஓட்டங்கள் | 75 | 2,998 | 1,906 | 246 |
துடுப்பாட்ட சராசரி | 37.50 | 37.94 | 31.76 | 13.66 |
100கள்/50கள் | 0/1 | 3/23 | 1/6 | 0/1 |
அதிக ஓட்டங்கள் | 74 | 235 | 92* | 52 |
பந்து வீச்சுகள் | 6 | 860 | 228 | 6 |
இலக்குகள் | 0 | 17 | 5 | – |
பந்துவீச்சு சராசரி | - | 29.52 | 34.20 | – |
சுற்றில் 5 இலக்குகள் | - | – | – | – |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | - | – | – | – |
சிறந்த பந்துவீச்சு | -/- | 3/70 | 1/9 | – |
பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 63/– | 12/– | 5/– |
25 டிசம்பர், 2013 தரவுப்படி மூலம்: ESPN Cricinfo |
தனிப்பட்ட வாழ்க்கை
கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி பயின்ற அசான் பிரியஞ்சன், 2005 முதல் 2008 வரை பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடினார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் இவர் புளூம்ஃபீல்ட் துடுப்பாட்ட அணியில் இணைந்து விளையாடினார். தற்போது இவர் கொழும்பு தமிழ் யூனியன் துடுப்பாட்ட சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்
- "Ashan Priyanjan". Cricinfo (2011).
- "79th Battle of the Maroons". Battle of the Maroons.
- "Priyanjan to lead Lanka Youth T20 team at SAF Games in Bangladesh By Namal Pathirage". Sunday Times (டிசம்பர் 27, 2009).
- "Sri Lanka ‘A’ Vs England ‘A’ first one-dayer today". The Island (சனவரி 26, 2012).
- "Ashan Priyanjan". cricketarchive (2012).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.