சீவெர்ட்
சீவெர்ட் அல்லது சீவெர்ட் (Sievert) என்பது உயிரினங்களின் மீது விழும் கதிரியக்கத்தின் விளைவின் தாக்கத்தை அளக்கும் ஓர் அலகு. இது அனைத்துலக முறை அலகுளில் (அனைத்துலக முறை அலகுகள்) இருந்து பெற்ற ஓர் அலகு. இந்த அலகின் குறியெழுத்து Sv (எசுவி) என்பதாகும். ஒரு பொருளின் மீது விழும் அல்லது படியும் கதிரியக்க அளவை கிரே (Gray) என்னும் அலகால் குறிப்பது வழக்கம். ஆனால் சீவெர்ட் என்பது உயிரிகளில் மின்மப் பிரிவு ஏற்படுத்தும் கதிரியக்கத்தின் (மின்மப்படுத்தும் கதிரியக்கம், ionizing radiation) ஈடளவாகக் கணக்கிடும் அலகு ஆகும். சீவெர்ட் என்னும் இவ் அலகு, இரால்ப் மாக்சிமிலியன் சீவெர்ட் என்னும் சுவீடிய மருத்துவ இயற்பியலாளரைப் பெருமைப்படுத்தும் முகமாக அவரின் பெயரால் அழைக்கப்படுகின்றது.
வரையறை
கிரே (Gy) என்னும் அலகு, எந்தவொரு பொருளும் உள்வாங்கிப் தன்னுள் படிவுறும் கதிர்வீச்சு அல்லது கதிரியக்கத்தின் (D) அளவைக் குறிக்கும். சீவெர்ட் என்பது காமாக் கதிர்களால் ஏற்படும் தீவிளைவுகளுக்கு ஈடாகத் தரும் கதிர்வீச்சு (H).
கிரே (Gy) என்னும் அலகும், சீவெர்ட் (Sv) என்னும் அலகும், அனைத்துலக முறை அலகுளில் (அனைத்துலக முறை அலகுகள்) இருந்து வருவிக்கப்பெற்றவையே. இவை, ஒரு கிலோகிராம் நிறையுடைய பொருளில் படிவுறும் சூல் அலகால் அளக்கப்பெறும் ஆற்றல் (சூல்/கிலோகிராம்) ஆகும்:
அனைத்துலக முறை அலகுகள் (அனைத்துலக முறை அலகுகள்) |
---|
ஈடான படிவு
உயிரிய இழையத்தில் (திசுவில்), ஈடான கதிர்வீச்சு அல்லது கதிரியக்கப் படிவு என்பதைக் கண்டறிய, கிரே அளவில் (உள்வாங்கு) கதிரியக்கப் படிவை மதிப்பெடை அளவால் (weightin factor) (WR) பெருக்க வேண்டும். உள்வாங்குக் கதிரியக்கப்படிவும் (D), அதற்கு ஈடான கதிரியக்கப் படிவும் கீழ்க்கண்டவாறு கணிதத் தொடர்பு கொண்டவை:
- .
இந்த மதிப்பெடை என்பதைச் சில நேரங்களில் தரக் கெழு (quality factor) என்றும் அழைப்பர், கதிர்வீச்சின் வகையைப் பொருத்தும், ஆற்றல் அளவின் விரிவைப் பொருத்தும் (ஆற்றல் அளவின் ஏப்பாடு, energy range).[1]
இங்கு,
- HT உயிரிய இழையம் (திசு) (T) உள்வாங்கிய ஈடான கதிரியக்க அளவு(படிவு).
- DT,R உயிரிய இழையம் (திசு) (T) உள்வாங்கிய R வகையான கதிரியக்க அளவு(படிவு).
- WR என்பது கீழ்க்காணும் அட்டவணையில் வரையறை செய்யப்பட்ட மதிப்பெடை (weighting factor).
கதிரியக்க வகையும் ஆற்றாலும் | WR | |
---|---|---|
எதிர்மின்னிகள், மூவான்கள், ஒளியன்கள் (எல்லா ஆற்றலும்) | 1 | |
நேர்மின்னிகளும் மின்மமேற்ற பையான்களும் (charged pions) | 2 | |
ஆல்பாத் துகள்கள், அணுக்கருப்பிளவு விளைபொருட்கள், எடைமிகு மின்மவணுக்கள் | 20 | |
நொதுமிகள் (நியூட்ரான்கள்) (நேரியல் ஆற்றல் இடம்பெயர் சார்பியமானத் function of linear energy transfer ) L கி.எல.வோல்ட்/மைக்ரோ.மீ keV/μm) |
L < 10 | 1 |
10 ≤ L ≤ 100 | 0.32·L − 2.2 | |
L > 100 | 300 / sqrt(L) |
எடுத்துக்காட்டாக 1 Gy (கிரே) ஆல்பா துகள்கள் உள்வாங்கிய படிவு என்பது 20 ஃசீவ் (Sv) படிவுக்கு ஈடாகும். அதிக மதிப்பெடை எல்லையான 30 என்பது L = 100 keV/μm (கிலோ எலக்ட்ரான் -வோல்ட்/மைக்குரோ மீட்டர்) கொண்ட நொதுமிகளுக்கு ஆகும்.
விளைவேற்படுத்தும் படிவு
கதிரியக்க அல்லது கதிர்வீச்சின் விளைவேற்படுத்தும் படிவு (effective dose) (E), என்பது ஒருவர் தன் உடலில் சராசரியாக கதிரியக்கத்துக்கு உட்பட்ட எல்லா இழையங்களுக்குமான (திசுக்களுக்குமான) மதிப்பெடைகளை கூட்டினால் 1 என வரும்பொழுது பெறும் கதிர்வீச்சுப் படிவு அளவாகும்:[1][2]
- .
இழைய(திசு) வகை | WT (ஒவ்வொன்றுக்கும்) | WT (குழு) |
---|---|---|
எலும்பு மச்சை, பெருங்குடல், நுரையீரல், வயிறு, முலை, மீதமுள்ள இழையங்கள் | 0.12 | 0.72 |
கருப்பைகள் அல்லது விதைப்பைகள் | 0.08 | 0.08 |
சிறுநீர்ப்பை, மூச்சுக்குழாய், கல்லீரல், தைராய்டு | 0.04 | 0.16 |
எலும்பு பரப்பு, மூளை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், தோல் | 0.01 | 0.04 |
மொத்தம் | 1.00 |
மற்ற உயிரிகளுக்கும், மாந்தர்களை ஒப்பிட்டு மதிப்பெடை எண்கள் வரையறை செய்யப்பெற்றுள்ளன. :[2]
உயிரினம் | ஒப்பீட்டு மதிப்பெடை |
---|---|
தீநுண்மங்கள், பாக்டீரியா, புரோடோசோவாக்கள் | 0.03 – 0.0003 |
பூச்சிகள் | 0.1 – 0.002 |
மெல்லுடலிகள் | 0.06 – 0.006 |
தாவரங்கள் | 2 – 0.02 |
மீன் | 0.75 – 0.03 |
நிலநீர் வாழிகள் | 0.4 – 0.14 |
ஊர்வன | 1 – 0.075 |
பறவைகள் | 0.6 – 0.15 |
குறிப்புகளும் மேற்கோள்களும்
- "The 2007 Recommendations". International Commission on Radiological Protection. பார்த்த நாள் 2011-04-15.
- A D Wrixon. "New ICRP recommendations". Journal on Radiological Protection. பார்த்த நாள் 2011-04-15.
உசாத்துணை நூற்பட்டியல்
- Abdeljelil Bakri, Neil Heather, Jorge Hendrichs, and Ian Ferris; Fifty Years of Radiation Biology in Entomology: Lessons Learned from IDIDAS, Annals of the Entomological Society of America, 98(1): 1-12 (2005)
- Introduction to Quantities and Units for Ionising Radiation National Physical Laboratory
- Radiation Protection Japanese Nuclear Emergency: EPA's Radiation Air Monitoring
- Report of the United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation to the General Assembly (pdf), United Nations Scientific Community on the Effects of Atomic Radiation