ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து)

சங்க நூலான பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. இப்பாடலகளைப் பாடியவர் கபிலர்; பாடப்பட்ட அரசன் செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை. இவனைப் பற்றிய செய்திகளை புகழூர் தாமிழி (பிராமி) கல்வெட்டும் கூறுகிறது. பாடல்களை பாடி கபில பெற்ற பரிசில் - 1,00,000 காணம் காசு சிறுபுறம். அத்துடன் 'நன்றா' என்னும் குன்றின்மேல் அரசனும் புலவரும் ஏறிநின்று அவர்களின் கண்ணுக்குத் தெரியும் நாட்டையெல்லாம் அரசன் அவருக்கு கொடுத்தான். வாழியாதனின் தந்தை; அந்துவன். தாய்; பொறையன் பெருந்தேவி.[1]

குறிப்புகள்

  1. பொறையன் பெருந்தேவி தந்தையின் பெயர் 'ஒருதந்தை'
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.