2016 இலாகூர் தற்கொலைத் தாக்குதல்

மார்ச் 27, 2016 அன்று பாக்கித்தானின் இலாகூரின் பெரிய பூங்காக்களில் ஒன்றான குல்சன்-இ-இக்பால் பூங்காவின் வாயிலுக்கருகில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 69 நபர்கள் உயிரிழந்தனர்; 300க்கும் கூடுதலானோர் காயமுற்றனர்.[1][2][3] உயிர்ப்பு ஞாயிறு நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த கிறித்தவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடந்ததாக அறியப்படுகின்றது; இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களும் சிறுவர்களுமாவர்.[4] பாக்கித்தானிய தாலிபானின் ஜமாத்-உல்-அராரா என்ற தீவிரவாதக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.[5]

2016 இலாகூர் தற்கொலைத் தாக்குதல்
Part of வடமேற்கு பாக்கிதான் போர்
குல்சன்-இ-இக்பால் பூங்கா
குல்சன்-இ-இக்பால் பூங்கா
குல்சன்-இ-இக்பால் பூங்கா
இடம்குல்சன்-இ-இக்பால் பூங்கா, லாகூர், பாக்கித்தான்
ஆள்கூறுகள்31.51625°N 74.29032°E / 31.51625; 74.29032
நாள்27 மார்ச் 2016
6:30 pm (UTC+05:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
கிறித்தவ குடிமக்கள்
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்
ஆயுதம்வெடிகுண்டு அரைஞாண்பட்டை
இறப்பு(கள்)69
காயமடைந்தோர்300+
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
ஜமாத்-உல்-அரார்

பின்னணி

பாக்கித்தானில் சமயச் சிறுபான்மையினருக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடும் பல அமைப்புக்களுக்கு பாக்கித்தானிய தாலிபான் மேற்பார்ப்பு அமைப்பாக விளங்குகின்றது. இவர்களால் பாக்கிதானின் மக்கள்தொகையில் 2% வரையிலுள்ள கிறித்தவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.[4]

2013இல் நடந்த தற்கொலைத் தாக்குதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க அனைத்துப் புனிதர் தேவாலயத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்.[6][7] மார்ச் 2015இல் லாகூர் தேவாலயக் குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.[8] அப்போது தாலிபான் இதற்கு பொறுப்பேற்றதுடன் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் எச்சரித்தது.[8]

பாக்கித்தானிய தாலிபானின் ஒரு பிரிவான ஜமாத்-உல்-அரார், முதலில் குழுவிலிருந்து பிரிந்து பின்னர் மார்ச் 2015இல் மீண்டும் இணைந்தது.[4][9][10] ஜமாத்-உல்-அரார் குழுதான் நவம்பர் 2014இல் வாகா எல்லைத் தாக்குதலை நடத்தியது; இதில் 60 பேர் கொல்லப்பட்டனர்; 100க்கும் கூடுதலானோர் காயமுற்றனர்.[11]

குண்டு வெடிப்பு

மாலை 6:30க்கு குண்டுவெடிப்பு நடைபெற்றது; அவசர உதவி 1122 தொடர்பாளர் மாலை 6:44க்கு அழைப்பு வந்ததாகவும் உடனே 23 மருத்துவ உதவுகை ஊர்திகள் அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.[12] 40க்கும் மேற்பட்ட உயிரற்ற உடல்கள் லாகூரின் ஜின்னா மருத்துவகத்தை வந்தடைந்தன.[13] மருத்துவ உதவுகை ஊர்திகள் பற்றாது போனமையால் வாடகையுந்துகளும் தானிகளும் காயமுற்றோரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன.[13] 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு இலாகூர் தேவாலயங்களில் குண்டுவெடிப்பை நடத்தியிருந்த பாக்கித்தானிய தாலிபானின் ஜமாத்-உல்-அரார் தற்போதைய குண்டுவெடிப்பிற்கும் உரிமை கோரியது.[14][15] ஜமாத்-உல்-அராரின் தொடர்பாளர் எசனுல்லா எசான் கிறித்தவர்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிபடுத்தினார்.[5]

மேற்சான்றுகள்

  1. "Suicide blast kills at least 72 in Lahore park". The Express Tribune (27 March 2016).
  2. "Pakistan explosion leaves many dead at Lahore park" (27 March 2016). பார்த்த நாள் 27 March 2016.
  3. "72 killed, over 300 injured in Lahore suicide blast". The News. 27 March 2016. http://www.thenews.com.pk/latest/108378-Blast-at-Lahore-park-leaves-over-30-injured. பார்த்த நாள்: 27 March 2016.
  4. Los Angeles Times (27 March 2016). "Taliban says it targeted Christians in a park on Easter Sunday, killing 65". latimes.com.
  5. "Scores killed in Lahore suicide attack". Al Jazeera. 27 March 2016. http://www.aljazeera.com/news/2016/03/deadly-blast-hits-pakistan-lahore-160327143110195.html. பார்த்த நாள்: 27 March 2016.
  6. "Orders fresh probe into church attack SC rues poor investigation in sensitive cases | Newspaper". Dawn.Com (2010-12-24). பார்த்த நாள் 2013-02-18.
  7. New York Times: "Suicide Attack at Christian Church in Pakistan Kills Dozens" by ISMAIL KHAN and SALMAN MASOOD 22 September 2013
  8. Raja, Adeel; Shah, Zahir; Mullen, Jethro. "In Pakistan, Taliban's Easter bombing targets Christians; 67 people killed". CNN. http://www.cnn.com/2016/03/27/asia/pakistan-lahore-deadly-blast/index.html. பார்த்த நாள்: 28 March 2016.
  9. "Pakistan Taliban faction announce split, new leader". Agence France-Presse. 4 September 2014. http://www.afp.com/en/node/2799017/. பார்த்த நாள்: 11 November 2014.
  10. "Pakistani splinter group rejoins Taliban amid fears of isolation". ராய்ட்டர்ஸ். 12 March 2015. http://www.reuters.com/article/2015/03/12/us-pakistan-militants-alliance-idUSKBN0M81WF20150312. பார்த்த நாள்: 13 March 2015.
  11. Farooq, Umar; Shah, Zahir; Riaz, Wasim. "TTP splinter groups claim Wagah attack; 60 dead". http://www.dawn.com/news/1142006/ttp-splinter-groups-claim-wagah-attack-60-dead. பார்த்த நாள்: 19 March 2015. "At least 60 people were killed on Sunday in a blast near the Wagah border, the responsibility of which was claimed separately by the outlawed Jundullah and TTP-affiliated Jamaat-ul-Ahrar outfits"
  12. "At least 60 dead, over 250 injured in Gulshan-e-Iqbal blast in Lahore" (27 March 2016). பார்த்த நாள் 27 March 2016.
  13. "30 killed in Lahore’s Gulshan-e-Iqbal Park bombing" (27 March 2016). பார்த்த நாள் 27 March 2016.
  14. "At least 65 dead after suicide attack in Lahore park" (27 March 2016). பார்த்த நாள் 27 March 2016.
  15. "Deadly blasts hit Pakistan churches in Lahore". BBC News. 15 March 2015. http://www.bbc.com/news/world-asia-31894708. பார்த்த நாள்: 27 March 2016.

தமிழ் ஊடகங்களில்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.