மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014

எபோலா தீநுண்ம கொள்ளைநோய் சில மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வருகின்றது. துவக்கத்தில் மார்ச்சு 2014இல் இந்தக் கொள்ளைநோய் கினியில் துவங்கியது.[2] தொடர்ந்து, இத்தீநுண்மம் லைபீரியா, சியேரா லியோனி, நைஜீரியா நாடுகளுக்குப் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் உயிரிழப்புக்களைக் கொண்டு இந்த திடீர்ப்பரவல் மனித வரலாற்றுக்காலத்திலேயே மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[3] உலக சுகாதார அமைப்பு (WHO) as of 4 ஆகத்து 2014 அறிக்கைகளின்படி மொத்தம் 1711 ஐயப்படக்கூடிய பாதிப்புகளும் 932 இறப்புகளும் நேர்ந்துள்ளன; இவற்றில் 1070 பாதிப்புகளும் 603 இறப்புகளும் மருத்துவ ஆய்வகங்களால் எபோலாவினால் ஏற்பட்டவையாக உறுதி செய்யப்பட்டவை.[4] மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், ஐக்கிய அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள், ஐரோப்பிய ஆணையம் போன்ற அமைப்புகள் இந்த நோய்ப்பரவலை எதிர்கொள்ள நிதி வழங்கியும் மருத்துவப் பணியாளர்களை அனுப்பியும் உதவி புரிகின்றன. எல்லைகளற்ற மருத்துவர்கள், செஞ்சிலுவை இயக்கம்,[5] மற்றும் சாமரிடன்சு பர்சு போன்ற தொண்டு நிறுவனங்களும் இப்பகுதிகளில் உதவி புரிந்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா தீநுண்மத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக வங்கி ரூ.1,200 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது.[6]இந்நோய் தொற்றினைத் தவிர்க்க ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் நோய்வாய்ப்புள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.[7]இப் பரவலின் காரணமாக மேற்கு ஆப்ரிக்காவில் எதிர்வரும் மாதங்களில் உணவு தானிய அறுவடை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் எனவும் இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகளவு உயரும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு செப்டம்பர் 2014இல் எச்சரித்தது .[8]

மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014
திடீர்ப் பரவலின் நிலப்படம்: 2014 கோடைக்காலம்
நாள்பெப்ரவரி 2014–இன்றுவரை
அமைவிடம்கினி, லைபீரியா, சியேரா லியோனி, நைஜீரியா
Casualties
1013 இறப்புகள் / 1848 பாதிப்புகள் (as of 9 ஆகத்து 2014)[1]

நோய்ப் பரவலின் காலக்கோடு

கீழே தரப்பட்டுள்ள காலக்கோட்டில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளும்[9] உலக சுகாதார அமைப்பின் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1] எபோலாவினால் ஏற்பட்டவை என உறுதி செய்யப்படாத ஐயுறும் பாதிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இங்கு தரப்பட்டவைத் தவிர, ஆகத்து 1 அன்று மொராக்கோவில் லைபீரியக் குடிமகன் ஒருவர் இறந்துள்ளார்;[10] ஆகத்து 5இல் எசுப்பானிய பாதிரி ஒருவர் இறந்துள்ளார்.[11]

மொத்த பாதிப்புகள்/இறப்புக்களின் வளர்முகம்.
அறிக்கை நாள்மொத்தம்கினிலைபீரியாசியெரா லியோன்நைஜிரியா
பாதிப்புகள்இறப்புகள்பாதிப்புகள்இறப்புகள்பாதிப்புகள்இறப்புகள்பாதிப்புகள்இறப்புகள்பாதிப்புகள்இறப்புகள்
4 ஆக 2014171193249536351628269128691
1 ஆக 2014160388748535846825564627341
30 சூலை 2014144082647234639122757425231
27 சூலை 2014132372946033932915653323311
23 சூலை 20141201672427319249129525224
20 சூலை 20141093660415314224127454219
18 சூலை 20141048632410310196116442206
15 சூலை 2014964603406304172105386194
10 சூலை 201488853940930914288337142
8 சூலை 201484451840830713184305127
2 சூலை 20147594674133031076523999
24 சூன் 2014599338390270513415834
18 சூன் 201452833739826433249749
10 சூன் 2014474252372236139897
5 சூன் 2014438231344215139817
2 சூன் 2014354208291193139506
27 சூன் 2014309200281186129165
23 சூன் 2014270181258174129
14 மே 2014245164233157129
5 மே 2014243162231155129
30 ஏப் 2014233153221146129
23 ஏப் 2014220143208136129
21 ஏப் 2014215136203129129
17 ஏப் 2014209129197122129
10 ஏப் 2014169108157101129
7 ஏப் 201416310215195127
2 ஏப் 2014135881278385
1 ஏப் 2014130821228082
31 மார் 2014114701127020
27 மார் 20141036610366
26 மார் 201486608660
25 மார் 201486598659

மேற்சான்றுகள்

  1. "Disease Outbreak News". 18 July 2014. http://www.afro.who.int/en/clusters-a-programmes/dpc/epidemic-a-pandemic-alert-and-response/outbreak-news.html.
  2. Roy-Macaulay, Clarence (31 July 2014). "Ebola Crisis Triggers Health Emergency". Drug Discov. Dev.. Associated Press (Highlands Ranch, Colorado, United States: ஃபிளைட் இண்டர்நேஷனல் (ஆங்கில இதழ்)). http://www.dddmag.com/news/2014/07/ebola-crisis-triggers-health-emergency. பார்த்த நாள்: 3 August 2014.
  3. "Chronology of Ebola Hemorrhagic Fever Outbreaks". Centers for Disease Control and Prevention (24 June 2014). பார்த்த நாள் 25 June 2014.
  4. http://www.afro.who.int/en/clusters-a-programmes/dpc/epidemic-a-pandemic-alert-and-response/outbreak-news/4240-ebola-virus-disease-west-africa-6-august-2014.html
  5. Nossiter, Adam (28 July 2014). "Fear of Ebola Breeds a Terror of Physicians". The New York Times. http://www.nytimes.com/2014/07/28/world/africa/ebola-epidemic-west-africa-guinea.html. பார்த்த நாள்: 29 July 2014.
  6. "எபோலா வைரஸை கட்டுப்படுத்த உலக வங்கி ரூ.1200 கோடி நிதி". தி இந்து - தமிழ் (ஆகத்து 6, 2014). பார்த்த நாள் ஆகத்து 7, 2014.
  7. "எபோலா நோய் பாதித்த பகுதிகளுக்கு தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் : சுகாதாரத்துறை அமைச்சர்". ஒன் இந்தியா. பார்த்த நாள் 7 ஆகத்து 2014.
  8. 7 (3 செப்டம்பர் 2014). "உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் எபோலா:ஐ.நா எச்சரிக்கை". தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்த்த நாள் 3 செப்டம்பர் 2014.
  9. "Outbreak of Ebola in Guinea and Liberia". Centers for Disease Control and Prevention.
  10. Liberian dies in Morocco of Ebola - Internal Affairs Minister discloses, Heritage, n.d. Accessed 2014-08-02
  11. http://www.juanciudad.org/news/es_ES/2014/08/05/0002/comunicado-5-8-2014-17-10

வெளி இணைப்புகள்

  • Outbreak Updates, World Health Organization.
  • Doctors without Borders (MSF) confirms that the Ebola virus is out of control., Blabberpost.
  • NBC News Storyline Ebola virus outbreak Continuing coverage of the Ebola outbreak in West Africa.
  • Doctors Without Borders: Massive Deployment Needed to Fight Epidemic in West Africa
  • Google Map of Ebola Outbreaks.
  • Ebola voices: Fighting the deadly virus in Guinea
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.