வங்கதேச அறிவாளிகள் படுகொலை (1971)

1971 வங்கதேச அறிவாளிகள் படுகொலை என்பது‍ 1971 இல் கிழக்கு‍ பாக்கிஸ்தானில் (இன்றைய வங்காளதேசம்) வங்காளதேச விடுதலைப் போர் ஆதரவாளர்களாயிருந்த அறிஞர்களைக் கொன்றொழிக்க பாகிஸ்தான் இராணுவத்தாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.

1971 வங்கதேச அறிவாளிகள் படுகொலை
அறிவாளிகளின் படுகொலையைக் குறிக்கும் டாக்காவில் முஜீப்நகரில் உள்ள சிற்பம்
இடம்கிழக்கு பாக்கிஸ்தான்
நாள்25 மார்‌ச்சு‍, 14 – 16 டிசம்பர் 1971
தாக்குதலுக்கு
உள்ளானோர்
வங்கதேச அறிவாளிகள்
தாக்குதல்
வகை
வெகுமக்கள் படுகொலை
தாக்கியோர்பாக்கிஸ்தான் இராணுவம்
ஜமாத்-இ-இசுலாமி
கிழக்கு‍ பாக்கிஸ்தான் அமைதிக்குழு

மார்‌ச்சு‍ 25

சர்ச்லைட் நடவடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக, 1971 ஆம் ஆண்டு, மார்ச்சு‍ 25 அன்று இரவு டாக்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.[1][2]

படுகொலையின் பின்னணி

கிழக்கு‍, மேற்கு‍ என இரண்டு‍ பிரிவாக பாகிஸ்தான் இருந்தது. மதத்தால் இசுலாமியரான மக்கள் தேசிய இனத்தால் வேறுபட்டு‍ இருந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் வங்காளி தேசிய உணர்வு பெருகியது. அந்த நிலையை உருவாக்கியதில் அறிவாளிகளின் பங்கு‍ இருந்தது.

முரண்பாடுகள் முற்றியதால் பாகிஸ்தானில் இருந்து‍ பிரிந்து‍ போவதற்காக 1971 இல் போராட்டம் நடந்தது. இந்தியாவும் அதற்கு‍ ஆதரவு அளித்தது. அப்போது‍ ராணுவ அதிகாரியாக மேஜர் ஜெனரல் ராவ் பர்மன் அலி இருந்தார். அறிவாளி சமூகத்தின் மீது‍ ராணுவம் மற்றும் மதவெறியர்களின் ஆத்திரம் கிளம்பியது. அதனால் பாகிஸ்தான் ராணுவமும் ஜமைத்-இ-இசுலாமி என்ற மதவாத அமைப்பும் இணைந்து‍ செயல்பட்டனர்.

டிசம்பர் 14 படுகொலை

ஜெனரல் ராவ் பர்மன் அலி

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 991 கல்வியாளர்கள், 49 டாக்டர்கள், 42 வழக்கறிஞர்கள், 16 கலை இலக்கியவாதிகள்,13 பத்திரிக்கையாளர்கள் திட்டமிட்டு‍ கைது‍ செய்யப்பட்டு‍ கொல்லப்பட்டனர். 1971 மார்ச் 25 முதல் டிசம்பர் 16 இல் ராணுவம் சரணடையும் வரை இது‍ தொடர்ந்தாலும் டிசம்பர் 14 இல் பெரும் அளவில் நடந்துள்ளது.

புள்ளி விவரம்

கொல்லப்பட்டவர்களின் விபரம்

  • 991 கல்வியாளர்கள்
  • 49 மருத்துவர்கள்
  • 42 வழக்கறிஞர்கள்
  • 16 கலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொறியாளர்கள்
  • 13 பத்திரிக்கையாளர்கள்

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.