மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். மட்டக்களப்பு நகரமும் இப்பிரிவிலேயே உள்ளது. இப் பிரதேச செயலாளர் பிரிவில் புளியந்தீவு, மாந்தீவு, எருமைத்தீவு என்னும் தீவுகளும் உட்பட்ட 47 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
- அமிர்தகழி,
- அரசடி,
- பாரதிபுரம்,
- டச் பார்,
- ஞானசூரியம் சதுக்கம்,
- இருதயபுரம் மத்தி,
- இருதயபுரம் கிழக்கு,
- இருதயபுரம் மேற்கு,
- ஜயந்திபுரம்,
- கல்லடி,
- கல்லடி முகத்துவாரம்,
- கல்லடி உப்போடை,
- கல்லடி வேலூர்,
- கருவேப்பங்கேணி,
- கொக்குவில்,
- கூழாவடி,
- கூழாவடி கிழக்கு,
- கோட்டைமுனை,
- மாமாங்கம்,
- நாவற்குடா கிழக்கு,
- நாவற்குடா தெற்கு,
- நொச்சிமுனை,
- ஊறணி,
- பாலமீன்மடு,
- பனிச்சலடி,
- பெரிய உப்போடை,
- புளியந்தீவு மத்தி,
- புளியந்தீவு கிழக்கு,
- புளியந்தீவு தெற்கு,
- புளியந்தீவு மேற்கு,
- புன்னைச்சோலை,
- புதுநகர்,
- சத்துருக்கொண்டான்,
- சேத்துக்குடா,
- சின்ன ஊறணி,
- தாமரைக்கேணி,
- தாண்டவன்வெளி,
- திமிலதீவு,
- திருச்செந்தூர்,
- திருப்பெருந்துறை,
- திசவீரசிங்கம் சதுக்கம்,
- வீச்சுக்கல்முனை,
- வெட்டுக்காடு,
ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் மட்டக்களப்புக் கடலேரியும், வடக்கில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் இந்தியப் பெருங்கடலும்,எல்லைகளாக உள்ளன.
இப்பிரிவு --- சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
- [ochaonline.un.org/OchaLinkClick.aspx?link=ocha&docId=1111380 மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்படம்]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.