மக்கெடோனின் இரண்டாம் பிலிப்

மக்கெடோனின் இரண்டாம் பிலிப் (Philip II of Macedon, கிரேக்க மொழி: Φίλιππος Β' ὁ Μακεδών φίλος phílos, "நண்பன்" + ἵππος híppos, "குதிரை"[1] எழுத்துப்பெயர்ப்பு Philippos ; கி.மு 382336), மக்கெடோனிய இராச்சியத்தை கி.மு 359 முதல் கி.மு 336இல் கொலை செய்யப்படும்வரை ஆண்ட மன்னர் (பசிலெயசு) ஆவார். இவர் மக்கெடோனின் மூன்றாம் பிலிப் மற்றும் பேரரசன் அலெக்சந்தரின் தந்தை ஆவார்.

மக்கெடோனின் பிலிப் II
மக்கெடோனியாவின் பசிலெயசு
ஆட்சிகி.மு 359–336
முன்னிருந்தவர்மக்கெடோனின் மூன்றாம் பெர்டிகாசு
பேரரசன் அலெக்சாந்தர்
மனைவிகள்
  • அவுதாத்தா
  • பிலா
  • நைசெசிபோலிசு
  • பிலின்னா
  • ஒலிம்பியாசு
  • ஒடெசாவின் மேடா
  • கிளியோபாத்ரா யூரிடைசு
வாரிசு(கள்)சைனான்
மக்கெடோனின் மூன்றாம் பிலிப்
பேரரசன் அலெக்சாந்தர்
கிளியோபாத்ரா
தெசாலோனிகா
யூரோப்பா
கரானுசு
கிரேக்கம்Φίλιππος
மரபுஆர்கெட் பரம்பரை
தந்தைமக்கெடோனின் மூன்றாம் அமைந்தாசு
தாய்யூரிடைசு
பிறப்புகி.மு 382
பெல்லா, மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)
இறப்புஅக்டோபர் கி.மு 336 (அகவை 46)
ஐகை, மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)
அடக்கம்ஐகை, மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)

இவர் கிரேக்கத்தை ஒன்றுபடுத்தி ஐக்கிய மக்கெடோனிய இராச்சியத்தை நிறுவினார். ஏதேனும் நகர அரசை தமது படைகளால் கைப்பற்றுவார் அல்லது அதன் தலைவர்களுடன் உரையாடி/கையூட்டுக் கொடுத்து தமது இராச்சியத்தில் இணைப்பார். இவரது ஆட்சியில்தான் கி.மு 338இல் ஏதென்சிற்கு எதிரான கெரோனியப் போரில் அலெக்சாந்தர் தமது படைத்துறை வல்லமையை காட்டினார். பிலிப் கி.மு 336இல் ஒரு கலையரங்கில் தமது மெய்க்காப்பாளரால் கொலை செய்யப்பட்டார்.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.