பெலிக்சு யூரியேவிச் சீகல்

பெலிக்சு யூரியேவிச் சீகல் (Felix Yurievich Ziegel) (உருசியம்: Феликс Юрьевич Зигель, மார்ச் 20, 1920 - நவம்பர் 20, 1988) ஓர் சோவியத் ஒன்றிய ஆய்வாளர்,அண்டவியல் முதுமுனைவர், வானியலிலும் விண்வெளித் தேட்ட்த்திலும் 40-க்கும் மேற்பட்ட மக்கள் அறிவியல் நூலின் ஆசிரியர், உருசிய வான் அயற்பொருளியலாளர் ஆவார். மேலும் இவர் மாஸ்கோ வான்பறப்பியல் நிறுவனத்தில் விரிவுரையாளர்.[1][2] சோவியத் வான் அயற்பொருள் ஆய்வைச் சோவியத் வான் அயற்பொருள் ஆய்வுக்குழுவில் ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர்.1967 நவம்பர் 18 இல் ஒரேநாளில் சோவியத் ஒன்றிய வான் அயற்பொருள் கண்ட இடங்களைப் பற்றிய சோவியத் மையத் தொலைக்காட்சி பேச்சால் புகழ் ஈட்டி வான் அயற்பொருள் சார்ந்த பல கடிதங்களைப் பெற்றவர்.[3] திசைதிருப்புபவரது போராட்டத்தில் இறுதியாக 1976 இல் தோல்விகண்ட இவர், பின்னர் சொந்தமாகத் தன் வான் அயற்பொருள் ஆய்வைத் தொடர்ந்துள்ளார்.. இவர்1988 நவம்பரில் இறந்தார். அப்போது தன்மகளின் ஆவணக்கூட்த்தில் 17 தொகுதி ஆய்வு திரட்டுகளை விட்டுச் சென்றுள்ளார்.[4]

பெலிக்சு யூரியேவிச் சீகல்
பிறப்புமார்ச் 20, 1920
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
இறப்புநவம்பர் 20, 1988
மாஸ்கோ, சோவியத் ஓன்றியம்
குடியுரிமைசோவியத்து
துறைவானியல்
கணிதவியல்
அண்டவியல்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ பல்கலைக்கழகம்
அறியப்படுவது43 வானியல் நூல்களின் ஆசிரியர்
சோவியத் வான் அயற்பொருளியல் முன்னோடி

மேற்கோள்கள்

  1. "UFOs A-Z. Ziegel, Felix". www.ufologie.net. பார்த்த நாள் 2010-10-13.
  2. "Ф. Ю. Зигель". Энциклопедия непознанного. பார்த்த நாள் 2010-08-13.
  3. С. Кашницкий. "Феликс Зигель: он начал изучать НЛО еще при Сталине". АиФ. பார்த்த நாள் 2010-08-13.
  4. Т. Ф. Константинова-Зигель. "Кто такой Ф. Ю. Зигель". ufo.far.ru. பார்த்த நாள் 2010-08-13.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.