புளோரெஸ்
புளோரெஸ் (Flores) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். சும்பவா, கொமோடோ தீவுகளிற்கு கிழக்கில், லெம்பாட்டா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 14,300 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 18.3 லட்ச மக்கள் வாழ்கின்றனர்.
![]() புளோரெஸ் தீவின் இட அமைப்பியல் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 8°40′29″S 121°23′04″E |
தீவுக்கூட்டம் | சிறிய சுந்தா தீவுகள் |
பரப்பளவு | 13,540 km2 (5,230 sq mi)[1] |
பரப்பளவின்படி, தரவரிசை | 60th |
உயர்ந்த ஏற்றம் | 2 |
உயர்ந்த புள்ளி | போக்கோ மண்டசாவு |
நிர்வாகம் | |
இந்தோனேசியா | |
மாகாணம் | கிழக்கு நுசா டெங்கரா |
பெரிய குடியிருப்பு | மவுமெரே (மக். 70,000) |
மக்கள் | |
மக்கள்தொகை | 1,831,000 (2010) |
அடர்த்தி | 135 |
"புளோரெஸ்" எனும் சொல் போர்த்துக்கீச மொழியில் "மலர்கள்" என்பதை குறிக்கும்.
2004இல் இத்தீவில் புளோரெஸ் மனிதன் எனப்படும் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குட்டையான மனித இனத்தின் வன்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[2].
மேற்கோள்கள்
- Monk, K.A.; Fretes, Y., Reksodiharjo-Lilley, G. (1996). The Ecology of Nusa Tenggara and Maluku. Hong Kong: Periplus Editions Ltd.. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:962-593-076-0.
- Baab, Karen L.; Kieran P. McNulty, Katerina Harvati (10 July 2013). "Homo floresiensis Contextualized: A Geometric Morphometric Comparative Analysis of Fossil and Pathological Human Samples.". PLoS ONE 8 (7). doi:10.1371/journal.pone.0069119. http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0069119.
- L, Klemen (1999–2000). "Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941-1942".
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.