கொமோடோ (தீவு)

கொமோடோ (Komodo) இந்தோனேசியாவில் உள்ள 17508 தீவுகளில் ஒன்றாகும். சிறிய சுந்தா தீவுகளின் ஒரு பகுதியாக, சும்பவா தீவிற்கு கிழக்கில், புளோரெஸ் தீவிற்கு மேற்கில் இத்தீவு அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 390 சதுரக் கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் ஏறத்தாழ 2000 மக்கள் வாழ்கின்றனர்.

கொமோடோ
Komodo
தீவின் வடக்கு முனை
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்8.55°S 119.45°E / -8.55; 119.45
தீவுக்கூட்டம்சிறிய சுந்தா தீவுகள்
பரப்பளவு390 km2 (150 sq mi)
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணம்கிழக்கு நுசா டெங்கரா
மக்கள்
மக்கள்தொகைc. 2000
இனக்குழுக்கள்புகிஸ், வேறு
கொமோடோ டிராகன்

இந்தோனேசியாவின் கொமோடோ தேசியப் பூங்காவை சேர்ந்த இத்தீவு, உலகில் மிகப்பெரிய பல்லி கொமோடோ டிராகனின் முதன்மையான வாழிடமாகும்.

இங்கு இளஞ்சிவப்பு நிறம் கொண்ட (வெள்ளை மற்றும் சிவப்பு நிற மணல் கலந்ததால் கிடைத்த நிறம்) கடற்கரை உள்ளது. இக்கடற்கரையையும் சேர்த்து உலகில் ஏழு இடங்களில் மட்டுமே இந்நிறத்தில் மணல்கொண்ட கடற்கரைகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.