பாந்திரா-வொர்லி கடற்பாலம்

வாந்திரா-வொர்லி கடற்பாலம் (Bandra-Worli Sea Link, மராத்தி: वांद्रे-वरळी सागरी महामार्ग) மும்பையின் புறநகர் பாந்திராவை வொர்லியுடனும் பின்னர் நாரிமன்முனையுடனும் இணைக்கும் மேற்கு தீவு நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாகும். இது எட்டு வழிகள் கொண்டதாய் முன்தகைவு திண்காறை பாதைப்பாலங்களைக் கொண்டு நடுவில் தொங்கு பாலத்துடன் அமைந்துள்ளது. மகாராட்டிர மாநில சாலை மேம்பாட்டு கழகம் (MSRDC)யின் ரூ 1600 கோடிகள் செலவான இந்த திட்டத்தை இந்துஸ்தான் கன்ஸ்ட்ரகுஷன் கம்பெனி (HCC) நிறைவேற்றியுள்ளது. வடிவமைத்து திட்டமேற்பார்வை யிட்டது டிஏஆர் கன்சல்ட்டன்ட்ஸ். 30 சூன் 2009 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இதனை திறந்துவைத்தார்.இந்த கடற்பாலம், தற்போது 45-60 நிமிடங்கள் எடுக்கும் பாந்திரா (மராட்டி:வாந்திரா)-வொர்லி பயண நேரத்தை 07-08 நிமிடங்களாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[2]

பாந்திரா-வொர்லி கடற்பாலம்
தாதர் கடற்கரையிலிருந்து பிப்.2009 எடுத்தது
வாகன வகை/வழிகள்சிற்றுந்து 8 வழிகள்; பேருந்துகள் 2 வழிகள்
கடப்பதுமாகிம் விரிகுடா
இடம்மும்பை
அதிகாரபூர்வ பெயர்இராஜிவ்காந்தி கடற்பாலம்
Characteristics
வடிவமைப்புகம்பிப் பிணைப்பு தொங்குபாலம்
மொத்த நீளம்5.6 கிமீ
History
திறக்கப்பட்ட நாள்30th June, 2009[1]

திட்ட மேலோட்டம்

இந்த திட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 1999இல் சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேயால் அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கப்பட்டது. பொதுநல வழக்குகள், வடிவமைப்பு மாற்றங்கள், செலவேற்றங்கள் என தடங்கல்களை எதிர்கொண்டது.

  • இரண்டு கம்பி பிணைப்பு கம்பங்கள் புதியதாக தேவைப்பட்டன
  • கடலுக்குள் 150 மீ தள்ளவேண்டியிருந்தது
  • மீனவர்களின் கோரிக்கையை ஏற்று வொர்லி அருகாமையில் பாலத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது.

இந்த பாலம் மாகிம் அருகே மேற்கு விரைவு நெடுஞ்சாலையும் சுவாமி விவேகானந்த் சாலையும் சந்திக்கும் லவ்க்ரோவ் சாலைசந்திப்பிலிருந்து வொர்லி கடற்முகத்தை இணைக்கிறது.

பாந்திரா கம்பிப்பாலப்பகுதி 600 மீ நீளம் கொண்டது. இரு கம்பங்களும் 126 மீ உயரம் கொண்டவை. 2250 கிமீ அதிக தகைவுள்ள கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு கம்பிகள் 20,000 டன் எடையுள்ள பாலப்பகுதியை தாங்குகின்றன. நாட்டின் உயரிய கட்டிடக்கலை தொழிற்நுட்பத்திற்கு ஒரு சான்றாக விளங்குகிறது.

  • இப்பாலத்தின் மின்விளக்குகள் ரூ. 9 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
  • 38000 கிமீ நீள இரும்பு கம்பிகள்,575000 டன் திண்காறை மற்றும் 6000 வேலையாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
  • ஒருநாளில் 125000 வாகனங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.[3]

விமர்சனங்கள்

பாந்திரா-வொர்லி கடற்பாலம் மும்பை மேற்கு கடற்கரையின் வெகு சிறிய பகுதிக்கே பயனுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டதில் ஒரு பகுதிக்கே இத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கின்றன. வொர்லியில் போக்குவரத்து பிரிவதை சீர் செய்யவில்லை.இதனால் முழுப்பயன் கிட்டாது.[4].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.