பண்ருட்டி இராமச்சந்திரன்
பன்ருட்டி ச. இராமச்சந்திரன் ( Panruti S. Ramachandran)கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் 1937ல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார்.
பன்ருட்டி ச. இராமச்சந்திரன் | |
---|---|
அவைத் தலைவர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 21, 1937 புலியூர் , பண்ருட்டி |
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | சென்னை |
ஐந்து முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும், மு. கருணாநிதி , எம்.ஜி.ஆர் அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவர் 2011ல் ஆலந்தூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்னார்.
ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியிலும் பணியாற்றிய இவர் மக்கள் நல உரிமை கழகம் என்ற தனி அமைப்பை நடத்தினார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் அவைத் தலைவராக பணியாற்றிய இவர் , தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 10 டிசம்பர், 2013இல் விலகினார். அவர் தனது விலகல் கடிதத்தினை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரடியாக கொடுத்தார்.[1]
கட்சி தாவல்
தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் 20.03.2014 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதில் இணைந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார்.[2][3]
மேற்கோள்கள்
- "பண்ருட்டி ராமச்சந்திரன் முழுநேர அரசியலில் இருந்து விலகல்". bbc. (10 திசம்பர் 2013). பார்த்த நாள் 12 திசம்பர் 2013.
- "Panruti Ramachandran joins AIADMK". The Hindu. பார்த்த நாள் 20 பெப்ரவரி 2014.
- "சொந்த வீட்டிற்கு வந்து விட்ட உணர்வு: அதிமுகவில் ஐக்கியமான பண்ருட்டி ராமச்சத்திரன் பேட்டி". தினமணி. பார்த்த நாள் 20 பெப்ரவரி 2014.