ஜான் வில்க்ஸ் பூத்
ஜான் வில்க்ஸ் பூத் (John Wilkes Booth மே 10, 1838 - ஏப்ரல் 26, 1865) அமெரிக்க நடிகர் ஆவார். ஏப்ரல் 14, 1865 இல் வாசிங்டன், டி. சி. ஃபோர்டு திரை அரங்கில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர் ஜான் வில்க்ஸ் பூத் ஆவார்.[1]
ஜான் வில்க்ஸ் பூத் | |
---|---|
![]() 1865 இல் ஜான் வில்க்ஸ் பூத் | |
பிறப்பு | மே 10, 1838 பெல் ஏர், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | ஏப்ரல் 26, 1865 26) போர்ட் ராயல், வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா 38.1385°N 77.2302°W | (அகவை
இறப்பிற்கான காரணம் | துப்பாக்கிச் சூட்டின் காயம் |
கல்லறை | பால்ட்டிமோர், ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | ஜே. பி, வில்க்ஸ்ந் |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1855–1865 |
அறியப்படுவது | ஆபிரகாம் லிங்கன் படுகொலை |
கையொப்பம் | ![]() |
பிறப்பு
ஜான் வில்க்ஸ் பூத் மேரிலாந்தில் இருந்து 19 ஆம் நூற்றாண்டின் பிரபலமான பூத் திரையரங்கு குடும்பத்தில் பிறந்தார். அவர் மாரிலாந்தில் நன்கு அறியப்பட்ட நடிகர் ஆவார். பூத் தன் பெற்றோர்களுக்கு ஒன்பதாவது குழந்தையாக மே 10, 1838 அன்று நான்கு-அறைகள் கொண்ட மர வீடு ஒன்றில் பிறந்தார்.[2]
லிங்கனின் கொலை
ஜான் வில்க்ஸ் பூத் ஒரு கூட்டமைப்பின் ஆதரவாளராக இருந்தார். அமெரிக்காவின் அடிமை முறையை ஒழிப்பதை இவர் கடுமையாக எதிர்த்தார். இக்கூட்டமைப்பினர், துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் மாநில செயலாளர் வில்லியம் எச். ஸீவார்ட் ஆகியோரையும் கொல்லத் திட்டமிட்டிருந்தனர். ஸீவார்ட் காயங்களுடன் தப்பித்தார். துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சனைக் கொலைச் செய்ய இருந்த ஜார்ஜ் அட்ஜேரார்ட் அவரைக் கொல்வதற்கு பதிலாக மது அருந்திவிட்டு சென்றதால் ஆண்ட்ரூ ஜான்சன் தப்பித்தார். சதித் திட்டத்தை நிறைவேற்றுவதில் பூத் மட்டுமே வெற்றிபெற்றார். ஜான் வில்க்ஸ் பூத் லிங்கனின் தலையில் துப்பாக்கியில் சுட்டார். இதில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அடுத்த நாள் காலை மரணம் அடைந்தார்.
ஜான் வில்க்ஸ் பூத் ஜனாதிபதியின் பெட்டியிலிருந்து மேடையில் குதித்தார். அங்கு அவர் தனது கத்தியால் கூட்டத்தினரை அப்புறப்படுத்தி தப்பிச்சென்றார். காரெட்டின் பண்ணையில் பூத் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஏப்ரல் 26 ம் தேதி அதிகாலையில், படையினர் காரெட்டின் புகையிலை களஞ்சியத்தில் மறைந்திருந்தவர்களைப் பிடித்தனர். டேவிட் ஹரோல்ட் சரணடைந்தார். ஆனால் பூத் சரணடைவதற்கு மறுத்தார். "நான் வெளியே வந்து சண்டை போட விரும்புகிறேன்" என்றார். வீரர்கள் பின்னர் பண்ணைக்குத் தீ வைத்தனர். பூத் எரியும் களஞ்சியத்தில் உள்ளே நுழைந்தபோது, இராணுவ வீரர் பாஸ்டன் கார்பெட், அவரை சுட்டார். கழுத்தில் காயம் அடைந்த பூத், மூன்று மணி நேரத்தில் மரணம் அடைந்தார். தனது 26 ஆவது வயதில் அவர் மரணமடைந்தார்[3]
மேற்கோள்கள்
- Asia Booth (1996). Terry Alford. ed. John Wilkes Booth: A Sister's Memoir. Jackson, Miss.: University Press of Mississippi. பக். ix. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87805-883-4.
- https://www.biography.com/people/john-wilkes-booth-9219681
- https://www.britannica.com/biography/John-Wilkes-Booth