கிரனோபிள்
கிரனோபிள் (Grenoble, French pronunciation: [ɡʁə.nɔbl]; அருபித: Grenoblo) பிரான்சு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் பிரான்சிய ஆல்ப்சு அடிவாரத்தில் டிராக் ஆறு ஐசரெ ஆற்றுடன் கூடுமிடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். ரோன்-ஆல்ப்சு பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரனோபிள் ஐசரெ திணைக்களத்தின் தலைநகரமாக விளங்குகிறது. மலைத்தொடருக்கு அண்மையில் இருப்பதாலும் நகரின் அளவைக் கொண்டும் இது "ஆல்ப்சின் தலைநகரம்" என பிரான்சு நாட்டில் அறியப்படுகிறது.
கிரனோபிள் | ||
![]() | ||
இடது மேற்புறத்திலிருந்து: நகரின் அகல்பரப்புக் காட்சி, கிரனோபிள்-பாசுத்தில் கம்பிவட உந்துகள், சான்-ஆந்த்ரெ இடம், யார்டின் தெ வில், ஐசரெ ஆற்றுக்கரைகள் | ||
|
![]() | |
![]() ![]() கிரனோபிள் | ||
நிர்வாகம் | ||
---|---|---|
நாடு | பிரான்சு | |
பிரதேசம் | Rhône-Alpes | |
திணைக்களம் | Isère | |
Arrondissement | கிரனோபிள் | |
Intercommunality | கிரனோபிள் ஆல்ப்சு பெருநகரத்தின் குடிப்பகுதி திரட்டு | |
மேயர் | மிசெல் டெசுடாட்டு (2008–2014) | |
புள்ளிவிபரம் | ||
ஏற்றம் | 212–500 m (696–1,640 ft) (avg. 398 m (1,306 ft)) | |
நிலப்பகுதி1 | 18.44 km2 (7.12 sq mi) | |
மக்கட்தொகை2 | 1,56,659 (2008) | |
- மக்களடர்த்தி | 8,496/km2 (22,000/sq mi) | |
INSEE/Postal code | 38185/ 38000, 38100 | |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | ||
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள். |
கிரனோபிளின் வரலாறு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஒரு சிறிய காலிய சிற்றூராக இருந்த கிரனோபிள் 11வது நூற்றாண்டில் டவுஃபீனின் தலைநகரமாக ஆனபிறகு இதன் மதிப்புக் கூடியது. வரலாற்றில் பெரும்பாலும் இது பிரான்சு இராச்சியத்தின் எல்லையில் அமைந்திருந்த எளிமையான நகராட்சியாகவும் அரண்காவல் கோட்டை நகரமாகவும் விளங்கியது.
மிக விரைவான தொழில் வளர்ச்சியால் இதன் முதன்மை பெருகியது. இங்கு கையுறைத் தயாரிப்புத் தொழில் 18வது,19வது நூற்றாண்டுகளில் முதன்மையாக இருந்தது. பின்னர் 19வது இருபதாவது நூற்றாண்டுகளில் புனல் மின்நிலையங்கள் அமையத் தொடங்கின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1968இல் X ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுகள் இங்கு நடைபெற்றன. இந்நகரம் தற்போது ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க அறிவியல் மையமாக விளங்குகிறது.[1][2]
2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிரனோபிளின் மக்கள்தொகை 156,659ஆக இருந்தது. அவ்வாண்டில் கிரனோபிள் பெருநகரப் பகுதியின் (பிரெஞ்சு: aire urbaine de Grenoble) மக்கள்தொகை 664,832 ஆகவிருந்தது. நகரக் குடிமக்கள் "கிரனோபிளாய்" (Grenoblois) என்று அழைக்கப்படுகின்றனர்.
நகரக் காட்சிகள்



மேற்சான்றுகள்
- Graff, James (22 August 2004). "Secret Capitals". Time (New York). Archived from the original on 23 August 2004. http://web.archive.org/web/20040823192020/http://www.time.com/time/europe/secret/grenoble.html. பார்த்த நாள்: 29 October 2009.
- Pentland, William (9 July 2013). "World's 15 Most Inventive Cities". Forbes (New York). http://www.forbes.com/sites/williampentland/2013/07/09/worlds-15-most-inventive-cities/. பார்த்த நாள்: 16 July 2013.
வெளி இணைப்புகள்
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: கிரனோபிள்- Grenoble Chamber of Commerce and Industry
- Grenoble City website (பிரெஞ்சு)
- Official tourism office of Grenoble
- Semitag – Transports de l'agglomération grenobloise (பிரெஞ்சு)
- Comptable Grenoble le site spécialisé pour l'agglomération grenobloise (பிரெஞ்சு)
- Remembering Grenoble Photography Exposition (ஆங்கிலம்)