களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்
களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள் டிசம்பர் 12, 1997, இலங்கையில் களுத்துறை நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றன. மூன்று இலங்கைத் தமிழ் அரசியற் கைதிகள் அதே சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட எவரும் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை.
இப்படுகொலைகள் இடம்பெற்ற வேளை இச்சிறைச்சாலையில் மொத்தம் 137 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மூவர் டிசம்பர் 12 ம் தேதி பிப 1:00 மணிக்கு வார்ட் D ற்கு முன்பாக சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வு நடந்த வேளையில் சிறை அதிகாரிகள் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்களே வார்ட் D ஐத் திறந்து விட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களின் முன்னாலேயே தமிழர்கள் மூவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் எனவும் தப்பியவர்களின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
- வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்
- பிந்துனுவேவா சிறைச்சாலைப் படுகொலைகள்
- கறுப்பு ஜூலை
- இலங்கை இனப்பிரச்சினை காலக்கோடு
- இலங்கையின் அரச பயங்கரவாதம்