எம். பக்தவத்சலம்

எம். பக்தவத்சலம் (9 அக்டோபர் 1897 –13 பிப்ரவரி 1987) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.[1] விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.[2]

எம். பக்தவத்சலம்
எம். பக்தவத்சலம் அவர்களின் உருவப்படம் கொண்ட இந்தியத் தபால் தலை
தமிழக முதல்வர்
பதவியில்
2 அக்டோபர் 1963  6 மார்ச்சு 1967
முன்னவர் காமராசர்
பின்வந்தவர் கா. ந. அண்ணாதுரை
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 9 1897
இறப்பு 13 பெப்ரவரி 1987(1987-02-13) (அகவை 89)
சென்னை
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
பிள்ளைகள் சரோஜினி வரதப்பன்

1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர்.

நினைவிடம்

தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6483938.ece/amp/
  2. "காங்கிரசு கட்சியின் முன்னால் தமிழக முதல்வர் பக்தவச்சலம்".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.