எம். ஐ. எம். அப்துல் மஜீத்
எம். ஐ. எம். அப்துல் மஜீத் (M. I. M. Abdul Majid, மே 31, 1919 - சூன் 9, 1970) இலங்கையின் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவர். 1960 முதல் 1995 வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
எம். ஐ. எம். அப்துல் மஜீத் நாஉ | |
---|---|
நிந்தவூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
முன்னவர் | எவருமில்லை |
பின்வந்தவர் | எம். எம். முஸ்தபா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 31, 1919 சம்மாந்துறை, இலங்கை |
இறப்பு | சூன் 9, 1970 51) சம்மாந்துறை, இலங்கை | (அகவை
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
சுயேட்சை |
சமயம் | இசுலாம் |
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று கிராமத்தில் பிறந்தவர் அப்துல் மஜீத். இவர் மட்டக்களப்பு அரசினர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். முன்னாள் கல்வி அதிகாரி எம். ஐ. எம். சரீப், ஓய்வுநிலை அதிபர் எம். ஐ. எம். நயீம் ஆகியோர் இவரது உடன்பிறந்தவர்கள் ஆவர். சம்மாந்துறைப் பிரதேச சபைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. எம். எம். நெளஷாட் இவரது மகன் ஆவார்.[1]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்த இவர் தமிழ் மொழிப்பற்று மிகுந்தவர். 1960 மார்ச்[2], 1960 சூலை[3] நாடாளுமன்றத் தேர்தல்களில் அப்போதைய நிந்தவூர் தேர்தல் தொகுதியில் முதன் முறையாக சுயேட்சையாகப் போட்டியிட்டார். அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் எம். எம். முஸ்தபாவை இவர் வெற்றி பெற்று அக்கரைப்பற்றின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினரானார். எனினும், 1965,[4] 1970[5] தேர்தல்களில் எம். எம். முஸ்தபாவிடம் தோற்றார். இவரது காலத்திலேயே கிழக்கிலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலையான ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயம் அக்கரைப்பற்றில் நிறுவப்பட்டது.[1]
மேற்கோள்கள்
- "தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் இன நல்லுறவை பேணி அரும்பணி புரிந்த அரசியல்வாதி மர்ஹும் மஜீத்". தினகரன் (10 சூன் 2014). பார்த்த நாள் 10 சூன் 2014.
- "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.