இந்திய விடுதலைப் போராட்ட அருங்காட்சியகம்

இந்திய விடுதலைப் போராட்ட அருங்காட்சியகம் (Swatantrata Sangram Sanghralaya), இந்தியாவின் தலைநகமான தில்லி செங்கோட்டையில் அமைந்துள்ளது. இதனை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டவைகள்

இந்திய விடுதலைப் போராட்ட களங்களையும், வீரர்களையும், தலைவர்களையும் மையப்படுத்தி இவ்வருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அவைகள் பின்வருமாறு;

  1. 1857 சிப்பாய்க் கிளர்ச்சி தொடர்பான ஓவியங்கள்
  2. 1858 – 1884 முடிய இந்திய விடுதலப் போராட்டக்களங்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள்
  3. 1885 – 1905 முடிய இந்திய தேசிய காங்கிரசு இயக்கப் புகைப்படங்கள்
  4. 1906 – 1919 முடிய இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிதவாத மற்றும் தீவிரவாத சிந்தனை கொண்ட தலைவர்களின் புகைப்படங்கள்.
  5. மகாத்மா காந்தி யுகம், 1920 – 1929 தொடர்பான புகைப்படங்கள்
  6. ஒத்துழையாமை இயக்கத்தின் போது இந்தியா, 1930 – 1939
  7. வெள்ளையனே வெளியேறு இயக்கம், 1942 போராட்டக்களங்கள்
  8. இந்தியத் தேசிய இராணுவம், 1942
  9. இந்திய விடுதலைக் காட்சிகள், 15 ஆகஸ்டு 1947

இவ்வருங்காட்சியகம் இந்திய விடுதலைப் போராட்டங்கள், அதன் வரலாறு மற்றும் நிகழ்வுகள் குறித்தான புகைப்படங்கள், ஆவணங்கள், ஓவியங்கள், வண்ண அச்சுப்பிரதிகள் மற்றும் துப்பாக்கிகள், வாட்கள், கைத்துப்பாக்கிகள், கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டு இந்திய விடுதலை இயக்கத்தினை விளக்கும் வகையில் உள்ளது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Swatantrata Sangram Sanghralaya, Red Fort, New Delhi
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.