அந்தராளம்
அந்தராளம் (சமசுகிருதம்:अन्तराल), என்பது, வட இந்திய பஞ்சயாதனக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட கோயில்களின் கருவறைக்கும் மற்றும் மகா மண்டபத்திற்கும் இடையே அமைந்த முன்கூடம் அல்லது முற்றம் ஆகும்.

பஞ்சயாதன முறைப்படி அந்தராளம் அமைத்துக் கட்டப்பட்ட கந்தாரியா மகாதேவர் கோயிலின் வரைபடம், கஜுராஹோ:(எண் 4-ஐ காண்க)

கோயில் விமானத்திற்கும் மற்றும் மகா மண்டபத்திற்கும் இடையே அந்தராளம் அமைத்து கட்டப்பட்ட கஜுராஹோ கந்தாரிய மகாதேவர் கோயில், கஜுராஹோ

சாளுக்கியர் மற்றும் இராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்ட மல்லிகார்சுனர் கோவில், காசி விசுவநாதர் கோவில் -பட்டாடக்கல், வட கருநாடகம்
.
பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் அமைந்த கஜுராஹோவின் கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் இலக்குமணன் கோயில்களிலும், தென்னிந்தியாவின் சாளுக்கியர் கட்டிடக் கலையில் அமைக்கப்பட்ட கோயில்களில் விமானமத்திற்கும் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அந்தராளம் முறையில் முற்றவெளி அமைத்து கட்டப்பட்டுள்ளது. [1]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "Architecture on the Indian Subcontinent - Glossary". பார்த்த நாள் 2007-01-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.