அக்னி-5
அக்னி-5 ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் திட எரிபொருள் ஏவுகணையாகும். இது இந்தியாவிற்கு 5,500 கிமீ தொலைவிற்கு அப்பாலுள்ள இலக்கினையும் தாக்கவல்ல வல்லமையை அளிக்கும்.[1][2][7] இந்த ஏவுகணை 19 ஏப்ரல் 2012 மற்றும் 15 செப்டம்பர் 2013 அன்றும் ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது[11].[12].

அக்னி ஏவுகணை தாக்குதல் தூரம்.
அக்னி-5 | |
---|---|
![]() அக்னி-5 சோதனை | |
வகை | கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை[1][2] |
அமைக்கப்பட்ட நாடு | ![]() |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2014[3] (Under development) [4] |
பயன் படுத்தியவர் | இந்திய ராணுவம் |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) |
அளவீடுகள் | |
எடை | 50,000 கிகி[5] |
நீளம் | 17.5 மீ [6] |
விட்டம் | 2 மீ |
அதிகபட்ச வரம்பு | 6,000 கிலோமீட்டர்கள் (3,700 mi)[7] |
வெடிபொருள் | அணு |
போர்க்கலன் எடை | 1.1 டன்/1000 கிகி[8] |
இயந்திரம் | மூன்று நிலை திடம் |
இயங்கு தூரம் | 5,500 கிலோமீட்டர்கள் (3,400 mi)-க்கு மேல்[1][7] |
வேகம் | 24 Mach[9] |
ஏவு தளம் | 8 x 8 Tatra (Transporter erector launcher) & Rail Mobile Launcher (Canisterized missile package) [10] |
போக்குவரத்து | சாலை வழி எடுத்துச்செல்ல இயலும். |
சிறப்புக் கூறுகள்
- அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில் பெய்ஜிங், சாங்காய் சீன நகரங்கள் உள்ளன.[13]
- அக்னி-5 மூன்று நிலைகளைக் கொண்ட ஏவுகணையாகும். இதனால் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) வீச்சிற்கு 1.5 டன் எடையுள்ள போர் வெடிபொருளை கொண்டு செல்லக்கூடியது.[13]
- தற்போதைய நீண்ட தொலைவு ஏவக்கூடிய ஏவுகணையான அக்னி-3 3,500 கிமீ (2,100 மைல்கள்) செலுத்தக்கூடியது.
- ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன.
- அக்னி-5 ஏவுகணை முழுமையும் திடநிலை எரி பொருளால் இயங்குகிறது; 17 மீ உயரமுள்ள இந்த ஏவுகணையின் முனையில் பல்வேறு வகை வெடிபொருள்கள், அணுகுண்டு, வேதியியல் நச்சு பொருள், உயிரியல் ஆயுதம் அல்லது வேறு சேதம் விளைவிக்கும் பொருள் எடுத்துச் செல்லக்கூடியது.[13]
- அக்னி-5 ஏவுகணையை கட்டமைக்க ₹25 பில்லியன் ($486 மில்லியன்) செலவாகியுள்ளது.[13]
- இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.[13]
- அக்னி-5 ஏவுகணை செயற்கைக்கோள்களையும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது.
- அக்னி 5 ஏவுகணை முற்றிலும் உள்நாட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இந்தியா நவீன ஏவுகணையை உருவாக்கிவிடாமல் தடுக்க வல்லரசு நாடுகள் கடந்தகாலத்தில் போட்ட முட்டுக்கட்டைகளை மீறி இந்தியா அக்னி-5 ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
- "Eyeing China, India to enter ICBM club in 3 months". The Times of India. Nov 17, 2011. http://articles.timesofindia.indiatimes.com/2011-11-17/india/30409335_1_agni-v-agni-iv-agni-programme-director.
- "With Russian help, India to enter ICBM club soon". Dailypioneer. Oct 8, 2011. http://www.dailypioneer.com/columnists/item/47621-with-russian-help-india-to-join-icbm-big-league-soon.html.
- "DRDO Lab Develops Detonator for Nuclear Capable Agni-V Missile As It Gets Ready For Launch". Defencenow. January 17, 2012. http://www.defencenow.com/news/474/drdo-lab-develops-detonator-for-nuclear-capable-agni-v-missile-as-it-gets-ready-for-launch.html.
- "Agni V test depends on prime success". IBNLive. http://ibnlive.in.com/news/agni-v-test-depends--on-prime-success/194412-60-117.html. பார்த்த நாள்: 2011-11-11.
- Preparations apace for Agni V launch
- "DRDO plans to test 10 missiles this year". The Times of India. Jan 27, 2011. http://articles.timesofindia.indiatimes.com/2011-01-27/bhubaneswar/28376198_1_agni-ii-km-range-agni-iii. பார்த்த நாள்: 19 October 2011.
- "Agni-4/5". Missile Threat. 19 July 2010. http://www.missilethreat.com/missilesoftheworld/id.189/missile_detail.asp.
- Agni-V getting ready for launch
- India’s most potent missile Agni V all set for launch
- Y. Mallikarjun, Agni-V design completed; to be test-fired in 2010, தி இந்து, 27 November 2008
- "கண்டம் விட்டு கண்டும் தாவும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது". தினமலர். பார்த்த நாள் ஏப்ரல் 19, 2012.
- "அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம் ஏந்தி இலக்கை தாக்கியது". தினமலர். பார்த்த நாள் செப்டம்பர் 15, 2013.
- "Agni-V: All you want to know about it". த எகானமிக் டைம்சு. பார்த்த நாள் ஏப்ரல் 18, 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.