விக்கிமீடியா நிறுவனம்

விக்கிமீடியா நிறுவனம் ஒரு அமெரிக்க இலாபநோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது. விக்கிப்பீடியா, விக்சனரி உட்படப் பல தன்னார்வச் செயற்றிட்டங்களை பல மொழிகளில் இணையத்தில் முன்னெடுக்கிறது. இந்நிறுவனம் ஜிம்மி வேல்சினால் ஜூன் 20, 2003 இல் அறிவிக்கப்பட்டது.

விக்கிமீடியா நிறுவனம்

விக்கிமீடியா அறக்கட்டளை சின்னம்
வகை501(c)(3) தொண்டு நிறுவனம்
நிறுவப்பட்டதுசெயின்ட் பீட்டர்ஸ்பர்க், புளோரிடா, அமெரிக்கா
சூன் 20, 2003 (2003-06-20)
தலைமையகம்சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, அமெரிக்கா
வேலைசெய்வோர்டிங் சென் (குழுவின் தலைவர்)
ஜிம்மி வேல்ஸ் (சேர்மன்) [1]
சூ கார்ட்னர் (நிர்வாக இயக்குநர்)
சேவை புரியும் பகுதிஉலகளவில்
Focusகட்டற்ற, திறந்த உள்ளடக்க, விக்கி அடிப்படையிலான இணைய திட்டங்கள்
வழிமுறைவிக்கிப்பீடியா, விக்சனரி, விக்கி மேற்கோள், விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கிபொது, விக்கியினங்கள், விக்கி செய்திகள், விகிவேர்சிட்டி மற்றும் Wikimedia Incubator
வருமானம்US$ 10,632,254 (ஜூலை – டிசம்பர் 2009)[2]
தன்னார்வலர்350,000 (2005)[3]
பணியாளர்75 (ஜூலை 2011 வரை)[4]
இணையத்தளம்wikimediafoundation.org
விக்கிமீடியா நிறுவனம் (சான் பிரான்சிஸ்கோ)

குறிக்கோள்கள்

விக்கிமீடியா அறக்கட்டளையின் அறிவிக்கப்பட்ட இலக்கு திறந்த உள்ளடக்கம், விக்கி சார்ந்த திட்டங்கள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியன மற்றும் அந்த திட்டங்கள் முழு உள்ளடக்கங்களையும் பொதுவாக இலவசமாக வழங்குவது ஆகியன ஆகும்.[5]

திட்டங்கள், முன்னெடுப்புகள் மற்றும் அதிகாரங்கள்

திட்டங்கள்

விக்கிமீடியா திட்டங்கள் குடும்ப முத்திரை

பல மொழிகளில் உள்ள பொதுவான கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா உடன் இந்த அறக்கட்டளை கூடுதலாக ஒரு அகராதி மற்றும் சொற்களஞ்சியத்தை விக்சனரி என்னும் பெயரில் பல மொழிகளில் நிர்வகிக்கிறது.

மேற்கோள்கள்

  1. Cbrown1023. "Board of Trustees". Wikimedia Foundation. மூல முகவரியிலிருந்து 2008-01-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-01-19.
  2. 2009 Mid Year Financials
  3. (பிரெஞ்சு) Open for business (2007), Jaap Bloem & Menno van Doorn (trad. Audrey Vuillermier), éd. VINT, 2007 (ISBN 978-90-75414-20-2), p. 93. No official number available since 2006
  4. "Staff Page (Homepage from Wikimeda)". Wikimedia Foundation. பார்த்த நாள் 2011-02-07.
  5. Devouard, Florence. "Mission statement". Wikimedia Foundation. மூல முகவரியிலிருந்து 2007-09-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-01-28.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.