பாரிஸ்

பாரிஸ் அல்லது பாரி எனப்படுவது பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாகும். உலகத்தில் உள்ள‌ நகரங்களிலேயே மிக அழகிய நகரம் என்று பெயரெடுத்த பாரிஸ், நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் இதுவே. இந் நகரம் சீன் நதியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலது கரை வடக்கிலும், சிறிய இடது கரை தெற்கிலும் உள்ளது. இந்த ஆறு, அதன் கரையிலுள்ள மர வரிசைகளோடு கூடிய நடை பாதைகள் (quais), திறந்த வெளிப் புத்தக விற்பனை நிலையங்கள், ஆற்றின் வலது, இடது கரைகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள பாலங்கள் என்பவற்றுக்குப் பெயர் பெற்றது. சம்ஸ் எலிசீஸ் (Champs-Élysées) போன்ற மரவரிசைகளோடு கூடிய "புலேவாட்"டுகள் மற்றும் பல கட்டிடக்கலைச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கும்கூடப் பாரிஸ் புகழ் பெற்றது.

பாரிஸ்
நகரக் கொடி நகரச் சின்னம்

குறிக்கோள்: Fluctuat nec mergitur

முன்னணியில் ஈபெல் கோபுரம், லா டிபென்ஸ் புறநகரப் பகுதியில் உள்ள வானளாவிகள் பின்னணியில் தெரிகின்றன.
அமைவிடம்
நேர வலயம் CET (UTC +1)
ஆள்கூறுகள் 48°52′0″N 2°19′59″E
நிர்வாகம்
நாடுபிரான்சு
பகுதி ஈல்-தெ-பிரான்சு
திணைக்களம் Paris (75)
துணைப் பிரிவுகள் 20
முதல்வர் திரு பெர்திரான் தெலனோவெ (சோசலிசக் கட்சி)
(2008–2014)
  நகர புள்ளிவிபரம்
நிலப்பரப்பு¹ 86.9[1] கிமீ²
மக்கள்தொகை²
(ஜனவரி. 2006 மதிப்பீடு)
2,167,994
 - நிலை பிரான்சில் முதலாவது
 - அடர்த்தி 24,948/km² (2006[1])
நகர விரிவு
நகரப் பகுதி 2,723 km² (1999)
 - மக்கள்தொகை 9,644,507
Metro Area 14,518.3 km² (1999)
 - மக்கள்தொகை 12,067,000 (2007)
1 French Land Register data, which excludes lakes, ponds, glaciers > 1 km² (0.386 sq mi or 247 acres) and river estuaries.
2 Population sans doubles comptes: residents of multiple communes (e.g., students and military personnel) only counted once.

இந்நகர் அண்ணளவாக 20 லட்சம் சனத்தொகையைக் கொண்டது (1999 கணக்கெடுப்பு: 2,147,857). பிரெஞ்சு மொழியில் aire urbaine de Paris என வழங்கப்படும் பாரிஸின் பெருநகரப் பகுதியில் சுமார் 1.1 கோடி மக்கள் (1999 கணக்கெடுப்பு: 11,174,743) வசிக்கிறார்கள்.

வரலாறு

(முழுமையான விவரங்களுக்குப் பாரிஸின் வரலாறு கட்டுரையைப் பார்க்கவும்)

பாரிஸ் என்ற பெயர், ரோமர் இப் பிரதேசத்தை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்துவந்த "கலிக்" இனக் குழுவின் பெயரான பரிசிஸ் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.

வரலாற்று அடிப்படையில் பாரிஸின் மையக்கரு, பலைஸ் டி ஜஸ்டிஸ் (Palais de Justice) மற்றும் நோட்ரே-டேம் டி பாரிஸ் தேவாலயம் என்பவற்றினால் பெரிதும் இடங் கொள்ளப்பட்டுள்ள, இலே டி லா சிட்டே (Île de la Cité) எனப்படும் ஒரு சிறு தீவாகும். இது பெரும்பாலும் 17ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அழகிய வீடுகளைக்கொண்ட இன்னொரு தீவான இலே செயிண்ட்-லூயிஸ் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கி.மு 52ல் ரோமர் வரும் வரை பாரிஸில், கலிக் இனக்குழுவினர் வாழ்ந்து வந்தனர். இவர்களை ரோமர் பாரிஸீ என அழைத்தனர், எனினும் நகரத்தின் பெயரை "சதுப்பு இடம்" எனப் பொருள்படும் லூட்டேசியா எனவே குறிப்பிட்டனர். சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர், நகரம், தற்போது லத்தீன் பகுதி என வழங்கும், சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது, இது பின்னர் "பாரிஸ்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ரோமர் ஆட்சி 508ல் முடிவடைந்தது. பிரான்க் குளோவியஸ், பாரிஸை, பிரான்க்ஸின் மெரோவிங்கியன் வம்சத்தின் தலைநகரமாக ஆக்கினான். 88 களில் இடம்பெற்ற Viking ஆக்கிரமிப்புகள், இலே டி லா சிட்டேயில் கோட்டை ஒன்றைக் கட்டவேண்டிய நிலையைப் பாரிஸியர்களுக்கு ஏற்படுத்தின. மார்ச் 28, 845 ல், ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது, எனினும் பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு அவன் பாரிஸை விட்டு நீங்கினான். பிற்காலக் கரோலிங்கியன் அரசர்களின் வலிமைக் குறைவினால், பாரிஸின் கவுண்ட்கள் படிப்படியாக வலிமை பெற்று வந்தனர். இதன் விளைவாக பாரிஸின் கவுண்ட், ஓடோ நிலப் பிரபுக்களினால் பிரான்சின் அரசனாகத் தெரியப்பட்டான், எனினும் சார்ள்ஸ் IIIயும் அரியணைக்கு உரிமை கோரினான். இறுதியாக 987ல் இறுதிக் கரோலிங்கியனின் மறைவுக்குப் பின், பாரிஸின் கவுண்டான ஹியூ கப்பெட் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான்.

11 ஆம் நூற்றாண்டில் நகரம் ஆற்றின் வலது கரைக்கும் விரிவடைந்தது. பிலிப் II அகஸ்தஸின் காலத்தையும் (1180–1223) உள்ளடக்கிய 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் நகரம் மிகவும் வளர்ச்சியடைந்தது. முக்கிய பாதைகளுக்குத் தளமிடப்பட்டது, முதல் லூவர் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டது, நோட்ரே டேம் தேவாலயம் அடங்கலாகப் பல தேவாலயங்கள் கட்டப்பட்டன அல்லது ஆரம்பிக்கப்பட்டன. வலது கரையிலிருந்த பல கல்விக்கூடங்கள் Sorbonne ஆக ஒழுங்கமைக்கப்பட்டன. அல்பர்ட்டஸ் மக்னஸ், சென். தோமஸ் அக்குவைனஸ் போன்றவர்கள் இவற்றைச் சேர்ந்த ஆரம்பகால அறிஞர்களாயிருந்தார்கள். 14 ஆம் நூற்றாண்டில் Black Death தாக்கம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடங்கல் தவிர மத்திய காலப் பகுதியில், பாரிஸ் ஒரு வர்த்தக மற்றும் அறிவு சார்ந்த மையமாக விளங்கியது. சூரிய அரசன் (Sun King) என அழைக்கப்பட்ட லூயிஸ் XIV அரசன் காலத்தில் (1643–1715) அரச மாளிகைகள் பாரிஸிலிருந்து, அண்மையிலுள்ள வெர்சாய்க்கு மாற்றப்பட்டது.

புவியியல்

பாரிஸ், சீன் ஆற்றின் வடக்கே திரும்பும் வளைவில் செயிண்ட் லூயி, டி லா சிட்டே என்னும் இரண்டு தீவுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. டி லா சிட்டே பாரிசின் பழைய பகுதியாகும். ஒப்பீட்டளவில் நகரம் மட்டமானது. மிகக்குறைந்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 35 மீட்டர் (115 அடி). பாரிஸ் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் உயரமானது 130 மீட்டர் (427 அடி) உயரமான மொண்ட்மார்ட்ரே ஆகும். நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் பூங்காக்களைத் தவிர்த்து, பாரிசின் பரப்பளவு 86.928 சதுர கிலோ மீட்டர்கள் (34 சதுர மைல்கள்) ஆகும். இறுதியாக 1860 ஆம் ஆண்டில் நகரத்துடன் அதன் புறத்தே அமைந்திருந்த பகுதிகளையும் இணைத்துக்கொண்டது, நகருக்கு இன்றைய வடிவத்தை அளித்தது. 1860ல் நகர எல்லை 78 சதுர கிலோ மீட்டரில் இருந்து, 1920ல் 86.9 சதுர கிலோ மீட்டர் ஆகுவரை சிறிதளவு அதிகரித்துள்ளது. 1929 ஆம் ஆண்டில் பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் காட்டுப் பூங்காக்கள் நகருடன் இணைக்கப்பட்டன. இதனால் பாரிசின் மொத்தப் பரப்பளவு 105.397 சதுர மீட்டர்கள் (41 சதுர மைல்கள்) ஆனது.

காலநிலை

பாரிஸ், பெருங்கடல் காலநிலையைக் கொண்டது. இது வட அத்திலாந்திக் நீரோட்டங்களினால் பாதிக்கப்படுகின்றது. இதனால் நகரத்தில் அதி கூடிய வெப்பநிலையையோ அதி குறைந்த வெப்பநிலையையோ காண்பது அரிது. கோடையில் சராசரி வெப்பநிலைகளாக உயர்ந்த அளவு 25 °ச (77 °ப)ம், குறைந்த அளவு 15 °ச (59 °ப) ஆகவும் இருக்கும். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருந்தாலும் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழ் செல்வதில்லை. சராசர் வெப்பநிலைகள் 3 °ச (37 °ப) – 8 °ச (46 °ப) ஆகக் காணப்படும். இளவேனில் மற்றும் இலையுதிர் காலங்களில் பகலில் மிதமான வெப்பநிலையும், இரவில் குளிரும் இருக்கும். ஆண்டின் எந்த நேரத்திலும் இங்கே மழை முகில்கள் காணப்படலாம். பாரிஸ் அதிக மழை கொண்ட நகரம் இல்லாவிட்டாலும், சடுதியான மழைக்கு இந் நகரம் பெயர்பெற்றது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 650 மிமீ (26 அங்) ஆக உள்ளது. ஆனால் ஓரளவு மிதமான மழை வீழ்ச்சி ஆண்டு முழுதும் பரவலாகப் பெய்யும். பெரும்பாலும் பாரிசில் பனி பெய்வதில்லை. சில மாரிகாலங்களில் இலேசாகப் பனி பெய்வது உண்டு. பாரிசில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான வெப்பநிலை 40.4 °ச (105 °ப). இது 1948 ஜூலை 28 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. மிகக் குறைந்த வெப்பநிலை −23.9 °ச (−11 °ப). இது 1879 டிசம்பர் 10 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. நகரின் மையப்பகுதியில் நகர்ப்புற வெப்பத் தாக்கம் காரணமாக இரவுகளிலும் காலையிலும் மிதமான வெப்பநிலை காணப்படுகின்றது. அத்துடன் நகரின் புறப்பகுதிகளைவிடக் குறைவான பனியும் பெய்கிறது.

நகர்த் தோற்றம்

மின் ஒளியில் பாரிஸ் அகலப்பரப்பு காட்சி

கட்டிடக்கலை

தற்காலப் பாரிஸ், பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடம் பெற்ற பெருமெடுப்பிலான நகர மீளமைப்புத் திட்டங்களின் விளைவாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரிஸ் ஒடுங்கிய தெருக்களையும், மரச் சட்ட வீடுகளையும் கொண்ட நகரமாக இருந்தது. ஆனால் 1852 தொடக்கம் ஓஸ்மான் பிரபுவின் நகராக்கத் திட்டங்களினால் பல பழைய கட்டிடங்கள் உடைக்கப்பட்டுச் சாலைகள் அகலமாக்கப்பட்டதுடன், இரண்டு பக்கங்களிலும் கல்லாலான புதிய செந்நெறிப் பாணிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இன்று வரை நிலைத்துள்ள பழைய கட்டிடங்கள் பெரும்பாலும் இக்காலத்தனவே. அக்காலத்தில் வரையறுக்கப்பட்ட "வரிசையாக்க" (alignement) சட்டவிதிகளைப் பாரிஸ் நகரம் பல புதிய கட்டிட வேலைகளில் இன்றும் பயன்படுத்தி வருவதனால், இந்த இரண்டாம் பேரரசுத் திட்டங்கள் பல இடங்களில் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன எனலாம். கட்டிடங்களின் உயரங்களும் அன்று வரையறுக்கப்பட்ட சாலை அகலங்களின் அடிப்படையிலேயே இன்றும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்துடன், உயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் நோக்கில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் கட்டிடச் சட்ட விதிகளில் சில திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன.

பாரிசின் எல்லைகள் மாறாமல் இருப்பதும், கட்டிடங்கள் கட்டுவதற்கான கடுமையான சட்டவிதிகளும், புதிய கட்டிடங்களுக்கான நிலங்கள் பற்றாக்குறையும் அருங்காட்சியகமாதல் (museumification) என்னும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. பாரிசின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும், நகர எல்லைக்குள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய பெரிய கட்டிடங்களையும், பிற சேவை வழங்கும் கட்டமைப்புக்களையும் அமைப்பதைக் கடினமாக்கியுள்ளது. பாரிசின் பல நிறுவனங்களும், பொருளாதாரக் கட்டமைப்புகளும் ஏற்கனவே புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன அல்லது இடம் பெயர்வதற்குத் திட்டமிடுகின்றன. நிதி வணிகப் பகுதி, முக்கியமான உணவு மொத்த விற்பனைச் சந்தை, முக்கியமான பெயர் பெற்ற பள்ளிகள் பல, உலகப் புகழ் பெற்ற ஆய்வுக் கூடங்கள், மிகப் பெரிய விளையாட்டு ஸ்டேடியம், போக்குவரத்து அமைச்சு போன்ற சில அமைச்சகங்கள், என்பன பாரிஸ் நகருக்கு வெளியே அமைந்துள்ளன. பிரான்சின் தேசிய ஆவணக் காப்பகம் 2010 ஆம் ஆண்டுக்கு முன் வடக்குப் புறநகர்ப் பகுதிக்கு இடம் பெயர உள்ளது. பாரிசை விரிவாக்க வேண்டிய தேவையை பிரான்ஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நவம்பர் 2007ல் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், எந்தப் பகுதிகளைப் பாரிசுடன் இணைப்பது என்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

புறநகர் மற்றும் பாரிஸ் பெரு நகரப் பிரதேசங்களில்(Île-de-France)

வெற்றி வளைவு
  • வணிகப் பகுதிகள்
    • ''La Défense'' – மேற்குப் பாரிஸிலுள்ள முக்கியமான அலுவலக, அரங்க மற்றும் கொள்வனவுத் தொகுதி
  • கேளிக்கைப் பூங்காக்கள்
    • டிஸ்னிலாண்ட் Resort பாரிஸ் – பாரிஸின் கிழக்கேயுள்ள, Marne-la-Vallée யின் புற நகர்ப் பகுதியிலுள்ளது
    • ''Parc Astérix'', பாரிஸின் வடக்கில்
  • நினைவுச் சின்னங்கள்
    • ''Grande Arche de la Défense
    • வேர்செயில்ஸ் அரண்மனை – பாரிஸின் வட கிழக்கிலுள்ள வெர்சாய் நகரில் அமைந்துள்ள லூயிஸ் XIV இனதும் பின் வந்த அரசர்களினதும் அரச மாளிகைகள். பிரான்ஸின் அதிக சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடம்.
    • ''Vaux-le-Vicomte'', மெலுனுக்கு அண்மையிலுள்ள சிறிய அரச மாளிகை. இதனைப் பின்பற்றியே வெர்சாய் மாளிகைகள் வடிவமைக்கப்படன.
    • செயிண்ட் டெனிஸ் பசிலிக்கா – பண்டைய கொதிக் தேவாலயம் மற்றும் பல பேரரசர்களின் புதைகுழிகள், நகரின் வடக்கிலுள்ளது.

நிகழ்ச்சிகள்

நொட்ரே டேமின் காட்சி மண்டபத்திலிருந்து பாரிஸ் நகரக் காட்சி
  • 52 BC – பின்னர் பாரிஸான லூதேசியா, கல்லோ-ரோமரினால் கட்டப்பட்டது
  • 1113பியரே அபிலார்ட் தன்னுடைய பாடசாலையை ஆரம்பித்தார்
  • 1163 – நொட்ரே டேமின் கட்டிட வேலைகள் ஆரம்பம்
  • 1257 – Sorbonne பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது
  • 1682 – லூயிஸ் XIV moves the French court from the Tuileries palace to Versailles
  • சூலை, 1789Storming of the Bastille
    • அரச குடும்பம் வேர்செயில்சிலிருந்து பாரிசுக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டது.
  • 1814நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆறாவது கூட்டணிப் படைகள் பாரிஸை ஆக்கிரமித்தன.
  • 1815நூறு நாட்கள் முடிவுக்குப் பின்னர் பாரிஸ் மீண்டும் ஏழாவது கூட்டணிப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.
  • 1840 – நெப்போலியனின் உடல் Les Invalides இல் அடக்கம் செய்யப்பட்டது.
  • 1853 – Baron Haussmann பாரிஸின் மையப் பகுதியை மீளமைத்தார்
  • 1855''Exposition Universelle'' (1855)
  • 1856பாரிஸ் மகாநாடு கூட்டப்பட்டது
லாண்ட்சட் 7இலிருந்து எடுக்கப்பட்ட, பாரிஸின் இன்னொரு simulated-நிற செய்மதிப் படிமம். இது பாரிஸ் நகர மத்திய பகுதியைப் பெருப்பித்துக் காட்டுகிறது

மேற்கோள்கள்

  1. Excluding Bois de Boulogne and Bois de Vincennes

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.