ஆசிரியர்

ஆசிரியர் (ஒலிப்பு ) (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) எனப்படுபவர் மற்றவர்களுக்கு பள்ளிக்கூடமொன்றில் கல்வி கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் தனிப்பயிற்சியாளர் என அழைக்கப்படுகிறார். ஆசிரியர் என்பவர் ஊதியம் பெற்றுக்கொன்று கல்விச்சேவை பணியாகச் செய்பவர். மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பவர். ஆசிரியர் என்பது ஒரு குறிப்பிட்ட தொழில் செய்பவரை குறிக்கும் சொல். மாற்றுப்பெயர்கள் உபாத்தியார், வாத்தியார் மற்றும் குரு. இந்த சொற்கள் எல்லாம் கல்வி கற்றுக்கொடுப்பவரை குறிக்கும் ஒரு பொருள் வார்த்தையாகும். உபாத்தியார் மற்றும் குரு வடமொழிசொற்களாகும் . இதற்கு இணையான தமிழ் சொல் ஆசிரியர் என்பதாகும். வாத்தியார் என்பது பேச்சுவழக்கு.

ஆசிரியர்
சியேரா லியோனி நாட்டு பென்டெம்புவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி வகுப்பறை.
தொழில்
பெயர்கள் ஆசிரியர், கல்வியாளர்
வகை பணி
செயற்பாட்டுத் துறை கல்வி
விவரம்
தகுதிகள் கற்பிக்கும் திறன், இனிய சுபாவம், பொறுமை
தேவையான கல்வித்தகைமை ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ்
தொழிற்புலம் பள்ளிக்கூடங்கள்
தொடர்புடைய தொழில்கள் பேராசிரியர், கல்வித்துறை, விரிவுரையாளர், பயிற்சியாளர்
சராசரி ஊதியம் $43,009 (அமெரிக்க பொதுத்துறை பள்ளிகள்) 2006-2007 கல்வியாண்டு[1]
இந்து சமயத் துறவியும் குருவுமான ஆதி சங்கரர் தமது சீடர்களுக்கு கற்பித்தல்.

ஆசிரியர்கள் பொதுவாக ஓர் பள்ளிக்கூடத்தில் அல்லது அத்தகைய முறையான கல்வியகத்தில் பணியிலமர்ந்து முறைசார் கல்வி வழங்குவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணியாற்ற ஓர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பயின்று ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தப் பின்னர் கல்வியியலில் கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் ஓர் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஓர் கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் இலக்கியம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் கலை, சமய நூல்கள், குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களிலும் கற்பிக்கின்றனர். திருக்குர்ஆன்,விவிலியம் வேதங்கள் போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு, ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

ஆசிரியர் எதிர் குரு

இருவென இருந்து - எழுவென எழுந்து - சொல்லெனச் சொல்லி மேல் - கீழ் அடுக்கதிகார முறையைக் கொண்டது குரு - சிஷ்ய உறவு. மாறாக , ஆசிரியர் - மாணவர் உறவு என்பது நட்பு பாராட்டுவது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.